ஈரோடு:
காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி விடைத்தாள் திருத்தும் மையங்களில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தையே நடைமுறைப்படுத்த வேண்டும். மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான அழுத்தங்களை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும். ஆசிரியர், அலுவலர் பணியிடங்களை குறைக்க அமைக்கப்பட்டுள்ள ஆதிசேய்யா குழுவினை உடனடியாக கலைத்திட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாயன்று ஈரோட்டில் விடைத்தாள் திருத்தும் மையங்களில் தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (ஜாக்டோ) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஈரோடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பின் தலைவர் சரவணன் தலைமை வகித்தார். மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி மாநில பொதுச்செயலாளர் நேரு, பட்டதாரி ஆசிரியர்கள் சங்க இணைச் செயலாளர் பாலாஜி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இந்த திரளான ஆசிரியர்கள் பங்கேற்றனர்.இதேபோல் கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள போடிசின்னாம்பாளையத்தில் செயல்படும் தனியார் பள்ளி விடைத்தாள் திருத்தும் மையத்தின் முன்பு ஆசிரியர்கள் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.