ஈரோடு,
ஏப்ரல் 28 ஆம் தேதி ஈரோட்டில் தொழில் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி நடைபெறவுள்ளது.

இதுதொடர்பாக, ஈரோட்டில் செவ்வாயன்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் டி.ஜெகதீசன் கூறியதாவது:- ஈரோடு பெருந்துறை சாலையில் உள்ள பரிமளம் மஹாலில் ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் ஏப்.28 ஆம் தேதியன்று காலை 10.30 முதல் இரவு 8.30 மணி வரை கண்காட்சி நடைபெறுகிறது. இதில், விவசாயம், மருத்துவம், உணவு வகைகள், தொழில்நுட்பம், கட்டுமான பொருள்கள், கணிப்பொறி மற்றும் அதனை சார்ந்த பொருள்கள், வாகனங்கள், மின்சார சாதனங்கள், எலக்ட்ரானிக் பொருள்கள், வங்கிகள், கடன் மற்றும் காப்பீடு, கட்டிட மூலப் பொருள்கள், போட்டோ வீடியோ, வீட்டு உபயோகப் பொருள்கள், மெத்தைகள், ஜவுளி வகைகள், மென்பொருள்கள், கல்வி, அலுவலகப் பொருட்கள் என அனைத்து வகையான பொருட்கள் கண்காட்சியில் வைக்கப்படுகிறது.

மேலும், மாணவ, மாணவியர்களுக்கான தனித்திறனை வெளிப்படுத்தும் வகையில் நடனப் போட்டி, ஓவியப்போட்டி, கட்டுரை போட்டி, யோகாசனப் போட்டி, பாட்டுப்போட்டி மற்றும் மாறுவேடப் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. இதில், இலவச மருத்துவ முகாம் மற்றும் ரத்ததான முகாம், வேலைவாய்ப்பு முகாம் போன்றவை நடைபெறவுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.