பியாங்யாங்,
வடகொரியாவில் ஹுவாங்காய் சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30 சுற்றுலா பயணிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வடகொரியாவில் ஹுவாங்காய் சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சீனாவை சேர்ந்த 30 சுற்றுலாவாசிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.  இதுபற்றி சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், வடகொரியாவில் சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்ற பேருந்து சாலை விபத்தில் சிக்கியுள்ளது என தெரிய வந்துள்ளது.  இதில் எண்ணற்றோர் பலியாகி இருக்க கூடும் என தெரிவித்துள்ளது.
சீனாவில் உள்ள அரசு தொலைக்காட்சியின் ஆங்கில சேனல் ஒன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், சுற்றுலா பேருந்து ஒன்று பாலத்தில் இருந்து கவிழ்ந்ததில் 30 பேர் பலியாகி உள்ளனர் என தெரிவித்திருந்தது.  அதன்பின் அந்த செய்தி நீக்கப்பட்டு விட்டது.

Leave A Reply