சென்னை,
சென்னை அடையாறில் உள்ள இந்தியன் வங்கியில் துப்பாக்கியை காட்டி ரூ. 7 லட்சத்தை கொள்ளையடித்தவரை காவல் துறையினர் கைது செய்துள்னர்.
சென்னை அடையாறு இந்திரா நகரில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் இன்று துப்பாக்கியுடன் நுழைந்த கொள்ளையன் அங்கு உள்ளவர்களை துப்பாக்கியை காட்டி மிரட்டி 7 லட்சம் ரூபாயை எடுத்துக் கொண்டு தப்பி ஓடினார். இதையடுத்து தப்பிச் சென்ற கொள்ளையனை பொதுமக்களும் காவல் துறையினரும் விரட்டிப்பிடித்தனர்.

குற்றவாளி கேளம்பாக்கத்தைச் சேர்ந்த மணீஷ் குமார் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. கொள்ளையனிடம் இருந்து துப்பாக்கியை பறிமுதல் செய்த அடையாறு போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply

%d bloggers like this: