புதுதில்லி :

உன்னோ மற்றும் கத்துவாவில் சிறு குழந்தைகள் மிகக் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதிற்கு பிரதமர் மோடி எந்த கண்டனமும் கருத்தையும் தெரிவிக்காமல் இருப்பதற்கு பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களும் கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் தற்போது உலகம் முழுவதும் உள்ள 600க்கும் அதிகமான அமைப்புகள் ஒருங்கிணைந்த கடிதத்தை பிரதமருக்கு அனுப்பியுள்ளனர்.

மொத்தமாக இந்தியா உள்பட உலகம் முழுவதும் உள்ள 637 அமைப்புகள் ஒரு குழுவாக இணைந்து சிறுமிகளின் பாலியல்  படுகொலைக்கு மோடியின் அமைதி  ஆச்சரியத்தை ஏற்படுத்துக்கிறது. இது நீதிக்கு எந்த உத்திரவாதத்தையும் அளிக்காது என கூறியுள்ளனர். மோடிக்கு தரப்பட்டுள்ள கடிதத்தில் 200 அமைப்புகள் மற்றும் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியாவிலுள்ள பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள் ஏராளமானோர் கையெழுத்திடப்பட்டுள்ளது.

நாட்டையே சோகத்திலும், கொந்தளிப்பிலும் ஆழ்த்தியுள்ள இவ்விரு சம்பவங்களுமே பாஜகவை சார்ந்த கொடூரர்களால் அரங்கேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: