அகர்தலா,
திரிபுராவில் 14 வயது சிறுமியை பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் சங்பரிவார் அமைப்பின் தலைவர் மனோஜ் கோஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.
திரிபுராவின் ஹோவாய்  தெலியமுரா என்ற பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் தன்னை கடந்த 2017-ம் ஆண்டு முதல் பண்ணை வீட்டில் அடைத்து வைத்து தொழிலதிபர்  பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து வெளியே யாரிடமும் சொல்லக் கூடாது எனவும் அச்சிறுமியை அவர் மிரட்டப்பட்டிருக்கிறார். தற்போது பண்ணை வீட்டில் இருந்து தப்பிய சிறுமி காவல் துறையில் புகார் கொடுத்து உள்ளார்.

இப்புகாரின் அடிப்படையில் 58 வயதான மனோஜ் கோஷ் என்ற தொழிலதிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இதனிடையே கைது செய்ப்பட்ட மனோஜ் கோஷ் அகில் பாரத் விகாஸ் பரிஷத் என்ற அமைப்பின் தலைவர் என கூறப்படுகிறது. அதேநேரத்தில் மனோஜ் கோஷ், விஸ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகி என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

You must be logged in to post a comment.