ஈரோடு,
தனது வேலைவாய்ப்பு பதிவு எண்ணில், வேறு நபருக்கு வேலை வழங்கி முறைகேடு நடைபெற்றுள்ளதாக இளைஞர் ஒருவர் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம், சிவகிரி தாலுகா, குலவிளக்கு அடுத்த மின்னப்பாளையத்தை சேர்ந்தவர் ஆனந்தகுமார். இவர் 10 ஆம் வகுப்பு வரை படித்துவிட்டு, கடந்த 1999 ஆம் ஆண்டு ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தார். இவருக்கு 9537/99 என்ற பதிவு எண் வழங்கப்பட்டது. இந்நிலையில் இவர் தனது பதிவு எண்ணை புதுப்பிக்க சென்றபோது, இந்த எண்ணுக்கு அரசு பணி வழங்கப்பட்டுவிட்டது. எனவே, பதிவை புதுப்பிக்க வேண்டாம் எனக்கூறி திருப்பி அனுப்பியுள்ளனர்.

இதுகுறித்து விசாரித்தபோது, மற்றொரு வாலிபருக்கு அதே பதிவு எண் வழங்கி அவருக்கு அரசு பணியும் வழங்கப்பட்டது தெரியவந்தது. இதுபற்றி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆனந்தகுமார் முறையிட்டபோதும், உரிய விளக்கம் அளிக்க மறுத்து வருவதாக கூறப்படுகிறது. இதன்காரணமாக தனது வேலைவாய்ப்பு பதிவை தெடர முடியாமலும், அரசு பணி கிடைப்பதற்கான வாய்ப்பை இழந்துவிட்டதாகவும் கூறி திங்களன்று மாவட்ட ஆட்சியர் பிராகரிடம், பாதிக்கப்பட்ட ஆனந்தகுமார் மனு அளித்தார். இம்மனுவினை பெற்றுக்கொண்ட ஆட்சியர் இதுபற்றி விசாரிக்க, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலருக்கு உத்தரவிட்டார்.

Leave a Reply

You must be logged in to post a comment.