புதுதில்லி,
வரும் கல்வியாண்டில், நாடு முழுவதும் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பி.டெக் மற்றும் எம். டெக் இடங்களை குறைக்க அகில இந்திய தொழில் நுட்ப கல்விகவுன்சில் (AICTE) திட்டமிட்டுள்ளது.

பத்து அல்லது பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு, பொறியியல் படிப்புக்கு பெரும் வரவேற்பு இருந்தபோது, ஏராளமான தனியார் நிறுவனங்கள், எந்த வித அடிப்படை வசதியும் இல்லாமல் தெருத் தெருவுக்கு கல்லூரிகளை கட்டிவிட்டன. ஏஐசிடிஇ-யின் அனுமதியையும் பெற்று மாணவர்களிடம் லட்சக்கணக்கில் கட்டணம் வசூலித்து, கொள்ளை லாபம் சம்பாதித்தன. இதனால், வீட்டிற்கு இரண்டு பொறியியல் பட்டதாரிகள் உருவானார்கள். ஆனால், நாட்டில் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு புதிதாக உருவாகவில்லை. ஏற்கெனவே இருந்த வேலைவாய்ப்பும் சுருங்கத் தொடங்கியது. தற்போது பொறியியல் படிப்பவர்கள், அந்த துறையை விட்டு, வேறு துறைகளில்தான் வேலை தேடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், தற்போது பொறியியல் படிப்புக்கான ஆர்வமும் புதிய தலைமுறையிடம் குறைந்து விட்டது. இதையடுத்து, ஒரு லட்சத்து 30 ஆயிரம் பி.டெக் மற்றும் எம்.டெக் இடங்களைக் குறைக்க ஏ.ஐ.சி.டி.இ. முடிவு செய்துள்ளது.

ஏற்கெனவே 24 ஆயிரம் பொறியியல்படிப்புக்கான இடங்களை கொண்டுள்ள 83 கல்வி நிறுவனங்கள், தங்களின் கல்லூரிகளை நிரந்தரமாக மூடுவதற்கு அனுமதி கேட்டு ஏ.ஐ.சி.டி.இ.யிடம் விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. பொறியியல் படிப்புகள் சிலவற்றுக்கான அங்கீகாரத்தை ரத்து செய்ய அனுமதி கோரியும் 450 கல்லூரிகள் முறையிட்டுள்ளன.

Leave a Reply

You must be logged in to post a comment.