முகமது அமீன் நகர்(ஹைதராபாத்), ஏப்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றுபட்ட தீர்மானகரமான கட்சியாக இந்த மாநாட்டில் இருந்து வெளி வருகிறது. ஆர்.எஸ்.எஸ்., பாஜக ஆட்சியை வீழ்த்துவதே எங்கள் பிரதான கடமை என்று அகில இந்தியப் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறினார்.
ஹைதராபாத் முகமது அமீன் நகரில் ஏப்ரல் 18ஆம் தேதி தொடங்கி ஐந்து நாட்கள் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22ஆவது அகில இந்திய மாநாடு ஏப்ரல் 22ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வெற்றிகரமாக நிறைவடைந்தது. கடைசி நாள் நிகழ்வில் கட்சியின் புதிய மத்தியக்குழுவும், மத்தியக் கட்டுப்பாட்டுக் குழுவும் தேர்வு செய்யப்பட்டது. மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளராக சீதாராம் யெச்சூரி (வயது 65) தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநாட்டில் கூடியிருந்த பிரதிநிதிகளின் உற்சாக வாழ்த்து முழக்கங்களுக்கு இடையே சீதாராம் யெச்சூரி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் நான், பொறுப்புமிக்க கடமைகளை நிறைவேற்ற என் முழு ஆற்றலையும் பயன்படுத்தி செயல்படுவேன் என்று என் கட்சிக்கும், நாட்டு மக்களுக்கும் உறுதியளிக்கிறேன்.
இந்த முக்கியமான மாநாட்டில் விரிவான விவாதங்கள் நடத்தி முக்கிய முடிவுகள் எடுத்திருக்கிறோம். இதில் இருந்து ஒட்டுமொத்தமாக ஒரே ஒரு செய்தியைத் தான் சொல்ல வேண்டுமென்றால், எங்கள் வர்க்க எதிரிகளுக்குச் சொல்லிக் கொள்கிறோம், நாங்கள் இங்கிருந்து ஒன்றுபட்ட, தீர்மானகரமான கட்சியாக வெளி வந்திருக்கிறோம்.
நவீன தாராளமயக் கொள்கைகளை மூர்க்கத்தனமாக அமலாக்கும் பாஜக – ஆர்எஸ்எஸ் ஆட்சியின் வகுப்புவாத சக்திகள் நாட்டின் மதசார்பற்ற, ஜனநாயகக் கட்டமைப்பைத் தகர்க்க அனுமதிக்க மாட்டோம் என்று நாட்டுக்கும், இந்த உலகத்துக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.
நாடாளுமன்ற ஜனநாயகத்தையும், அரசமைப்புச் சட்ட அதிகாரம் பெற்ற அமைப்புகளையும் இந்த ஆட்சியாளர்கள் சீர்குலைப்பதை மக்கள் போராட்டங்களின் அழுத்தத்தின் மூலம் தடுத்து நிறுத்துவோம். நாட்டு நலன், மக்கள் நலன் இரண்டையும் பாதுகாத்து புதிய இந்தியாவைப் படைப்போம்.
பாரதிய ஜனதா அரசை வீழ்த்துவதுதான் எங்கள் பிரதான கடமை. நம் முன் மிகப்பெரும் போராட்டங்கள் காத்திருக்கின்றன. நாம் அதற்குத் தயாராக இருக்க வேண்டும். இங்கு நிறைவேற்றப்பட்டவை வெறும் தீர்மானங்கள் அல்ல. இந்த தீர்மானங்களின் அடிப்படையில் வெகு மக்கள் ஆதரவோடு மக்கள் நலன் காக்க புரட்சிகரப் போராட்டங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொள்ளும்.
மார்க்சிஸ்ட் கட்சிக்குள் ஒற்றுமையில்லை, கட்சி பலவீனமடையும் என்ற செய்தியை எதிர்பார்த்து எங்கள் வர்க்க எதிரிகள் காத்திருந்தனர். ஆனால் அவர்கள் எதிர்பார்ப்புகளைப்  பொய்யாக்கி, கட்சி ஒற்றுமையுடன், தீர்மானகரமான கட்சியாக வந்திருக்கிறது. இந்த நாட்டு மக்களை விடுவிப்போம். நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டு இந்த போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வோம்.
சுரண்டல், ஒடுக்குமுறை இல்லாத இந்தியாவை உருவாக்க ஆர்எஸ்எஸ் பாஜகவைத் தோற்கடிப்போம். இந்த மாநாடு இந்த நாட்டு மக்களுக்குச் சொல்லும் செய்தி இதுதான். இந்த ஆட்சியாளர்களின் எதேச்சாதிகாரம், மதவெறி, ஜனநாயக நிறுவனங்கள் சீர்குலைப்பு, அமெரிக்காவின் இளைய பங்காளியாக இந்தியாவை சரணாகதி அடையச் செய்வது ஆகிய நான்கு அம்சங்களை எதிர்த்து போராடி முறியடிப்போம். நாட்டுக்கு நல்ல திசைவழியை உருவாக்க, நல்லதொரு மேம்பட்ட இந்தியாவின் எதிர்காலத்திற்காக இந்திய மக்கள் எங்களோடு இணைந்து வாருங்கள் என்று அழைக்கிறேன்.
தனித்தனியாக இருக்கும் ஐந்து விரல்கள் ஒன்றாக சேர்ந்து முஷ்டியை உயர்த்தினால் செவ்வணக்கம்! என்பதாகும். போராட்டக் களத்தில் அனைவரும் ஒன்றுபட்டு போராடுவோம். மக்கள் போராட்டத்தை வலுப்படுத்துவோம் என்ற செய்தியுடன் இங்கிருந்து செல்வோம். இவ்வாறு சீதாராம் யெச்சூரி கறினார்.
————
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் மொத்தம் 17 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
சீதாராம் யெச்சூரி (பொதுச் செயலாளர்)
பிரகாஷ் காரத்
எஸ்.ராமச்சந்திரன் பிள்ளை
பிமன் பாசு
மாணிக் சர்க்கார்
பிருந்தா காரத் (பெண்)
பினராயி விஜயன்
ஹன்னன் முல்லா
கொடியேரி பாலகிருஷ்ணன்
எம்.ஏ.பேபி
சூர்ய காந்த மிஸ்ரா
முகமது சலீம்
சுபாஷினி அலி (பெண்)
பி.வி.ராகவலு
ஜி.ராமகிருஷ்ணன்
தபன் சென்
நிலோத்பல் பாசு
மொத்தம் 95 பேருடன் புதிய மத்தியக்குழு தேர்வு செய்யப்பட்டது. 
இதில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் மேற்கண்ட 17 பேருடன், 
ஏ.கே.பத்மநாபன்
பெனுமல்லி மது
வி.சீனிவாச ராவ்
எம்.ஏ. க ஃ பூர்
தெபன் பட்டாச்சார்யா
அவதேஸ் குமார்
அருண் மேத்தா
சூரேந்தர் மாலிக்
ஓன்கார் சாத்
முகமது யூசுப் தாரிகாமி
கோபி கந்த் பக்ஷி
ஜி.வி.ஸ்ரீராம ரெட்டி
பி.கருணாகரன்
பி.கே.ஸ்ரீமதி (பெண்)
எம்.ஜி.ஜோசபின் (பெண்)
ஜெயராஜ் இ.பி.
வைக்கம் விஸ்வம்
டி.எம்.தாமஸ் ஐசக்
ஏ.விஜயராகவன்
கே.கே.சைலஜா (பெண்)
ஏ.கே.பாலன்
எலமரம் கரீம்
ஆதம் நரசய்ய நாராயண்
மகேந்திர சிங்
அலி கிஷோர் பட்நாயக்
பாசு தியோ
அம்ரா ராம்
டி.கே.ரங்கராஜன்
உ.வாசுகி (பெண்)
ஏ.சவுந்தரராஜன்
கே.பாலகிருஷ்ணன்
பி.சம்பத்
தம்மினேனி வீரபத்ரம்
எஸ்.வீரய்யா
செ.சீத்தா ராமுலு
அக்கோர் தேவ் பர்மா
பிஜன் தார்
பாதல் சௌத்ரி
ரமா தாஸ் (பெண்)
கௌதம் தாஸ்
ஹீராலால் யாதவ்
சியாமள் சக்கரவர்த்தி
மிருதுள் டே
ரேகா கோஸ்வாமி (பெண்)
நிருபன் சௌத்ரி
ஸ்ரீதீப் பட்டாச்சார்யா
ராமச்சந்திர தோம்
மின்னாத்தி கோஸ் (பெண்)
அஞ்சு கார் (பெண்)
ஹரி சிங் காங்க்
ஜோஹேந்தர சர்மா
ஜெ.எஸ். மஜூம்தார்
கே.ஹேமலதா (பெண்)
சுதா சுந்தரராமன் (பெண்)
ராஜேந்திர சர்மா
ஸ்வதேஸ் தேவ் ராய்
அசோக் தாவ்லே
எஸ்.புண்யவதி (பெண்)
புதிய உறுப்பினர்கள்
சுப்ரகாஷ் தாலுக்தார்
அருண் குமார் மிஸ்ரா
கே.எம்.திவாரி
கே.ராதாகிருஷ்ணன்
எம்.வி.கோவிந்தன் மாஸ்டர்
ஜஸ்வந்த் சிங்
ஜே.பி. காவித்
ஜி.நாகய்யா
தபன் சக்கரவர்த்தி
ஜிதேன் சௌத்ரி
முரளிதரன்
அருண் குமார்
விஜூ கிருஷ்ணன்
மரியம் தாவ்லே (பெண்)
ராபின் தேவ்
அப்பாஸ் ராய் சௌத்ரி
சுஜன் சக்கரவர்த்தி
அமியோ பத்ரா
சுக்வீந்தர் சிங் சிக்கோன்
(பெண் ஒரு இடம் நிரப்பப்படவில்லை)
——————————
(நிரந்தர அழைப்பாளர்கள்)
ராஜீந்தர் நேகி (செயலாளர், ஜார்கண்ட் மாநிலக்குழு)
சஞ்சய் பராட்டி (செயலாளர், சட்டீஸ்கர் மாநிலக்குழு)
மத்திய குழு சிறப்பு அழைப்பாளர்கள்
வி.எஸ்.அச்சுதானந்தன்
மல்லு ஸ்வராஜ்யம் (பெண்)
மதன் கோஸ்
பலோலி முகமது குட்டி
பி.ராமய்யா
கே.வரதராஜன்
——————————
மத்திய கட்டுப்பாட்டுக் குழு
பாசுதேவ் ஆச்சார்யா (தலைவர்)
பி.ராஜேந்திரன்
எஸ்.ஸ்ரீதர்
ஜி.ராமுலு
பொனானி பிஸ்வாஸ் (பெண்)
——————————
 

Leave a Reply

You must be logged in to post a comment.