திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் வாட்ஸ் அப்அட்மின்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காஷ்மீர் மாநிலம் கதுவாமாவட்டத்தில் 8 வயதுச் சிறுமி, சங்-பரிவார பேர்வழிகளால் பாலியல் வன்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத் திற்கு எதிராக நாடு முழுவதும் போராட் டங்கள் நடைபெற்று வருகின்றன.  இதனிடையே, சிறுமி வல்லுறவுச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் களுக்கு ஆதரவு தெரிவித்தும், அவர்களின் கைதை எதிர்த்தும் கேரளத்தில் சிலஇடங்களில் வன்முறை அரங்கேற்றப் பட்டது. ஏப்ரல் 16-ம் தேதியன்று கடைகள் மீதும், பேருந்துகள் மீதும் கல்வீச்சு நடந்தது. சில இடங்களில் காவல்துறையினரும் தாக்கப்பட்டனர். இந்நிலையில், முன்னறிவிப்பின்றி போராட்டம் என்ற பெயரில் வன்முறையில் ஈடுபட்டவர்களை கேரள போலீசார் கைது செய்து விசாரித்தனர். அப்போது, “வாய்ஸ் ஆப் யூத்”என்ற ஆர்எஸ்எஸ் அமைப்பின் ‘வாட்ஸ் அப்’ குழு மூலம் வந்த உத்தரவை அடுத்தே வன்முறையில் ஈடுபட்டதாக கைதானவர்கள் தெரிவித்தனர். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில், “வாய்ஸ் ஆப் யூத்” ஆர்எஸ்எஸ் வாட்ஸ் அப்குழுவின் அட்மின்கள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.