பஞ்சாயத்துத் தேர்தலில் CPIM-ஐ ஆதரித்து சுவர் விளம்பரம் எழுதிக்கொண்டிருக்கும் இந்த மூதாட்டியின் பெயர் தோழர். சிதாமணி ஸோரன்…

2009 ஜூன் 11 அன்று மேற்கு வங்கத்தில் மாவோயிஸ்டுகளால் கடத்திச் செல்லப்பட்டு கொலையுண்ட CPIM தோழர். சால்க் ஸோரனின் தாயார்…

தனது மகனின் தியாகக் குருதியால் சிவந்த செங்கொடியை கையிலேந்தி அவர் வாழும் பகுதியில் கட்சிக்காக போர்க்குணத்துடன் பணியாற்றி வாருகிறார் அந்த வீரத்தாய்…

“எனக்கு இன்னொரு மகன் இருந்திருந்தால்…அவனையும் இயக்கத்திற்காக கொடுத்திருப்பேன்” என்று கேரள மண்ணின் தியாகி தோழர். ரோஷனின் தந்தை, ரோஷனின் நினைவு தினத்தில் வீரமுழக்கமிட்டது போல்…

தனது மகன் சிறைக் கொட்டடியில் இருக்கும் போது சிறையில் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து தனது மகனின் பணியை முன்னெடுத்த தாய் நாவலில் வரும் பவெலின் தாய் நீலொவ்னா என்ற வீரத்தாய் போல்…

மகனின் இழப்பு கொடுத்த அடங்காத துயரத்தையும் மீறி தள்ளாத வயதிலும் செங்கொடி ஏந்தி இயக்க வேலைகளை செய்யும் மனவுறுதியை ஈடுசெய்யும் தியாகம் ஏதுமில்லை தாயே…

வங்கமண்ணில் செங்கொடி இயக்கம் உயிர்ப்புடன் இருக்கும் என்பதற்கு உங்களைப் போன்ற, உறவுகளை இழந்தும் மனவுறுதியுடன் களப்போராட்டத்தை முன்னெடுக்கும் வீரத்தாய்மார்களின் வீரமே ஆதாரம்…

நாங்கள் நம்புகிறோம்…வங்க மண்ணின் செங்கொடி இயக்கம் தடைகளை தகர்த்து முன்னேறும்…!

லால் சலாம்….!

-Sadan Thuckalai

Leave A Reply

%d bloggers like this: