“லோயா மரணம் குறித்து இனி யாரும் ஐயம் கிளப்பினால் அது Criminal Contempt ஆகக் கருதப்படும்” : மோடி அரசின் சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மிரட்டல்..
“”””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””””
நீதிபதி லோயாவின் சந்தேகத்திற்குரிய மரணம் குறித்து ஒரு சுதந்திரமான தனி விசாரணை கோரிய மனுவை தங்களின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ‘டிஸ்மிஸ்’ செய்த பின்னணியில் இப்போது பாஜகவினர் மகா திமிருடன் பேசத் தொடங்கியுள்ளனர்.

இனிமேல் லோயாவின் மரணம் குறித்து இப்படியான சந்தேகங்களைக் கிளப்புவது நீதித்துறையின் சுதந்திரத்திற்கும், நீதிமன்றங்கலின் நம்பகத் தன்மைக்கும் எதிரான எதிரான தாக்குதலாகக் கருதப்படும் எனவும் இனி இப்படியான வழக்குகளைத் தொடுப்பதே கிரிமினல் contempt ஆகக் கருதப்படும் என பாஜக அரசின் சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் மிரட்டியுள்ளார்.

அது சரி இரண்டு மாதங்களுக்கு முன்னர் இன்றைய தலைமை நீதிபதி உச்ச நீதிமன்றத்தில் பிரச்சினைக்குரிய வழக்குகளை விசாரிக்க நியமிக்கும் அமர்வுகளில் சார்புகள் காட்டப்படுவதாக நாங்கு மிகவும் நேர்மையான, மூத்த உச்சநீதிமன்ற நீதிபதிகல் குற்றம் சாட்டினரே, அதைவிடவா இன்றைய நீதித்துறையின் மீது வேறு யாரும் குற்றம் சாட்டிவிட முடியும்? அவர்கள் மீதும் criminal contempt குற்றச்சாட்டை எழுப்புவீர்களா அமைச்சரே?

Marx Anthonisamy

Leave a Reply

You must be logged in to post a comment.