மாநாட்டில் தலைமைக் குழுவாக மாணிக் சர்க்கார், கே.ராதாகிருஷ்ணன், மின்னாத்தி கோஷ், அம்ராராம், ஜெ.பி.காவித், எஸ்.வீரய்யா, முகமது யூசுப் தாரிகாமி ஆகிய 7 பேர் செயல்படுகின்றனர். வழிகாட்டும் குழுவாக அரசியல் தலைமைக்குழு செயல்பட்டு வருகிறது.இதுதவிர சுபாஷினி அலியை கன்வீனராகக் கொண்டு ஐந்து பேர் கொண்ட தீர்மானக் குழுவும், உ.வாசுகியை கன்வீனராகக் கொண்டு நான்கு பேர் கொண்ட தகுதி ஆய்வுக் குழுவும், ஜெ.எஸ்.மஜூம்தாரை தலைவராகக் கொண்டு ஏழு பேர் கொண்ட மினிட்ஸ் குழுவும் இம்மாநாட்டில் செயல்பட்டு வருகிறது.

நாடு முழுவதும் இருந்து மொத்தம் 765 பிரதிநிதிகள் மற்றும் 74 பார்வையாளர்கள் என மொத்தம் 839 பேர் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். தெலுங்கானா மாநிலக்குழு சார்பில் தொண்டர்கள் இம்மாநாட்டுப் பணிகளில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வருகின்றனர்.

#########################

மாற்றுத்திறனாளிகள் தொடர்பான தீர்மானத்தை முரளிதரண் முன்மொழிய பி.ஜான்சிராணி வழிமொழிந்தார்.

#####################################

அரசியல் ஸ்தாபன அறிக்கை மீதான விவாதத்தில் தமிழகம் சார்பில் என்.குணசேகரன் பேசினார்.

#####################

மாநாட்டு அரங்கில் தேநீர் இடைவேளைக்கிடையே ஜனநாட்டிய மன்ச் குழுவினரின் இசைநிகழ்ச்சி நடைபெற்றது.

 

 

 

 

Leave A Reply

%d bloggers like this: