நியாயமான விசாரணை, சார்பில்லாத, நடுநிலையான தீர்ப்பு ஆகியவற்றைக் கோருவதும் அதற்காகப் போராடுவதும் நம் கடமை…

நீதிபதி லோயா மரணம் குறித்து ஐயம் எழுப்புவது Criminal Contempt என மத்திய அசட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மிரட்டியுள்ளது கண்டிக்கத்தக்கது

இப்போது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவால் தள்ளுபடி செய்யப்பட்ட லோயா மரணம் தொடர்பான வழக்கு மிக முக்கியமான ஒன்று. ஒரு நேர்மையான நீதிபதியின் மரணம் குறித்து அவரது குடும்பத்தினர் நியாயமான அய்யங்களை எழுப்பியுள்ளனர்.

பலவிதமான குற்றச்சாட்டுகளுக்கு ஆளான ஆளும்கட்சித் தலைவர் ஒருவர் மீதான கொலைக் குற்றச்சாட்டை விசாரித்த ஒரு நீதிபதி சந்தேகத்திற்குரிய வகையில் இறந்துள்ளார். அவரது மரணத்தால் காலியான இடத்தை நிரப்பிய அடுத்த நீதிபதி உடனடியாக அமித்ஷாவை விடுதலை செய்கிறார்.

இந்த நாட்டில், இந்த ஆட்சியில் நீதி கிடைக்காதோ என்கிற அச்சம் இன்று மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. நியாயமான ஐயம் தோன்றுவதையே கிரிமினல் குற்றம் என்றால் நாடு எங்கே போய்க் கொண்டுள்ளது?

Marx Anthonisamy

Leave A Reply

%d bloggers like this: