விருதுநகர்:
அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி உதவிப் பேராசிரியர் நிர்மலா தேவியின் வீடுகளில் சிபிசிஐடி காவல்துறையினர் சோதனை நடத்தினர். மேலும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திலும் விசாரணை மேற்கொண்டனர்.

அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி உதவிப் பேராசிரியர் நிர்மலாதேவி, அதே கல்லூரியில் படித்த நான்கு மாணவிகளிடம் அதிக மதிப்பெண் மற்றும் பணம் வழங்கு
வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். அவர் மாணவிகளிடம் பேசிய ஒலிக் கோப்பு ஊடகங்களில் வைரலாகப் பரவியது. இதையடுத்து, இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆகியோர் கல்லூரி முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, பேராசிரியர் நிர்மலா தேவி மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். அவரை சிபிசிஐடி காவல்துறையினர் வெள்ளியன்று மதியம் 2 மணி முதல் காவலில் எடுத்து
விசாரணை நடத்தி வருகின்றனர்.விருதுநகர் சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து விசாரணை அதிகாரியான காவல் கண்காணிப்பாளர் ராஜேஸ்வரி, துணைக் காவல் கண்கா
ணிப்பாளர் சாஜிதா பேகம், முத்து சங்கரலிங்கம் ஆகியோர் பேராசிரியர் நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை நள்ளிரவு 12 மணி வரை தொடர்ந்தது.

பெரும்பாலான கேள்விகளுக்கு நிர்மலா தேவி பதில் கூறவில்லையெனவும், ஒரு சில கேள்விகளுக்கு மட்டுமே அவர் பதிலளித்துள்ளார் எனவும், அவற்றை வீடியோ மூலம்
பதிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.இந்நிலையில், சனிக்கிழமை சிபிசிஐடி காவல்துறையில் ஒரு குழுவினர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் சென்று சோதனை
நடத்தினர். பதிவாளர், தேர்வாணையர் அலுவலகங்களில் இருந்து சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும், நிர்மலாதேவி பல்கலைக்கழகம் வந்து சென்ற சி.சி.டி.வி. பதிவுகளை சேகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. நிர்மலா தேவியின் உடல் நிலையை நீதிமன்ற உத்தரவுப்படி மருத்துவக்குழுவினர் நேரில் வந்து பரிசோதித்த னர். நிர்மலா தேவியின் சகோதரர் ரவி சிபிசிஐடி அலுவலகத்திற்கு வந்து அவரைச் சந்தித்தார். இதற்கிடையே, அருப்புக்கோட்டையில் உள்ள நிர்மலா தேவியின் வீட்டில் சிபிசிஐடி காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
பேராசிரியர் நிர்மலா தேவியிடம் முழுமையான விசாரணை நடத்திய பின்பே, இவ்வழக்கின் முழு விவரம் மற்றும் அதில் தொடர்புடைய முக்கியப் புள்ளிகள் பற்றி தெரியவரும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave A Reply

%d bloggers like this: