===எஸ்.எஸ்.சுப்பிரமணியன்===                                                                                                                                      கோடைப் பருவம் துவக்க நிலையிலேயே மின் பற்றாக்குறையும், மின் வெட்டும், அதனால் மின் கட்டண உயர்வும் மக்களை தாக்கும் நிகழ்வுகளாக மாறிக்கொண்டுள்ளது. ஏற்கனவே நிதிப் பற்றாக்குறையால் தடுமாறும் மின் நிறுவனங்கள் அதிகரிக்கும் மின் தேவையை எதிர்கொள்ள கூடுதல் விலை கொடுத்து மின்சாரத்தை கொள்முதல் செய்வதால் நிறுவனங்கள் கூடுதல் நிதிச்சுமையை எதிர்கொள்ளும் நிகழ்வும் அதை மக்கள் மீது மடைமாற்றம் செய்யக்கூடிய நிலையும் மின்துறையில் எழுந்துள்ளது.

மக்களின் அத்தியாவசிய  சேவைப்பொருளாக உள்ள மின்சாரத்தை சந்தைப் பொருளாக்கி, காசுள்ளவர்களுக்கே மின்சாரம், காசற்றவர்கள் இருளை நோக்கி தள்ளுவதே மின்சார சட்டம் 2003, மின்கொள்கை 2005, திறந்த வெளி மின்பரிமாற்றக் கொள்கை, மின்சார சட்டதிருத்தம் 2014, ஆகியவைகளின் மூலம் நவீனதாராளமயக் கொள்கையை மின்துறையிலும் அமலாக்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது.

மின்சார உற்பத்தியும், மின் விநியோகமும் அரசு ஏகபோக உரிமையாக இருந்ததை மாற்றி மின்சாரத்தை யார் வேண்டுமானாலும் உற்பத்தி செய்யலாம், யாருக்கு வேண்டுமானாலும் விற்கலாம், விற்பவர்களும், வாங்குபவர்களும் செய்து கொள்ளும் ஒப்பந்த விலைக்கு மின் பரிமாற்றம் செய்து கொள்ளலாம் என்ற நிலையை உருவாக்கியுள்ளதால் மின் கட்டண நிர்ணயிப்பு, அரசின் ஏகபோக உரிமையாக இருந்ததை மாற்றி தனியார்கள் இலாப வேட்கையோடு விலை நிர்ணயம் செய்து கொள்ளலாம் என்ற நிலையை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த பின்னணியில் தான் மின்சார தேவையும், மின்சாரம் கிடைப்பதும், மின் கட்டணத்தை நிர்ணயிக்கும் காரணியாக மாறியுள்ளது. மின்சார சேவைப் பொருளாக இருந்ததை சந்தைப் பொருளாக மாற்றி இந்நாட்டு, பன்னாட்டு முதலாளிகள் கொள்கைக் காடாக மின்துறையை மாற்ற வேண்டும் என்ற மத்திய அரசின் நோக்கம் நிறைவேற்றியுள்ளது.

இந்திய நாட்டின் மின் உற்பத்தி திறன், தேவையை விட அதிகமாக இருந்த போதிலும், உற்பத்தி மின் நிலையங்கள் நாடு முழுவதும் பரவலாக இல்லாததும், மின்சார தொடரமைப்பு போதிய அளளவு இல்லாததும், நிர்வாக கோளாறுகளும், அரசு கடை பிடிக்கின்ற கொள்கையினாலும், கோடை வெப்ப காலங்களில் அதிகரிக்கும் மின் தேவையை எதிர்கொள்ளும் நிர்வாக ஏற்பாடு இல்லாததாலும் இந்தியாவின் பல பகுதியில் மின்வெட்டு நீக்கமற நிறைந்துள்ளது.

2017 ஆம் ஆண்டு ஒட்டு மொத்தமாக மின்வெட்டு என்பது 26ரூ சதவீதமாகவும், அது ஜனவரி மாதத்தில் மின் வெட்டு என்பது 5 மணி 17 நிமிடங்களாக இருந்தது. அதே ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 7 மணி அளவும், ஏப்ரல் மாதங்களில் மின்வெட்டு நேரம் 10 மணியாகவும் கூட அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. தேவையை விட உற்பத்தி அதிகமாக இருந்த போதும் கூட மின்வெட்டுக்கும், மின் பற்றாக்குறைக்கும், மின் தொடரமைப்பிலிருந்து மின் விநியோக கட்டமைப்புக்கு மாற்றுவதில் ஏற்படும் செயல் இழப்பும், மின் இழப்பும், மின் விநியோக கட்டமைப்பில் ஏற்படும் கோளாறுகளும் கூட மின் வெட்டு நேரத்தை கூடுதலாக்க துணையாக இருந்துள்ளது.

மின் சந்தையில், மின் கட்டண நிர்ணயிப்பு என்பது, மின் தேவைக்கும், மின்சாரம் கிடைக்கும் அளவுடன் ஒப்பிட்டே மின் கட்டண நிர்ணயிப்பு என்பது செய்யப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு மின்சாரத் தேவை குறைவாக உள்ள 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஒரு யூனிட் மின்சாரத்தின் கொள்முதல் விலை என்பது ரூ.3.23 ஆக இருந்தது. மார்ச் மாதத்தில் மின் தேவை அதிகரித்ததனால் அது ரூ.4/ ஆக மாறி 24 சதம் கட்டண உயர்வை உருவாக்கியுள்ளது.

2018 ஆம் ஆண்டில் மின்சார கொள்முதல் விலை யூனிட் ரூ.4.45/ பைசாவிலிருந்து கோடை காலத்தில் ரூ.6/ அல்லது ரூ.7/ ஆக வாய்ப்பு உள்ளது என புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
இதிலிருந்து தேவையின் அதிகரிப்பும், கிடைக்கும் மின்சாரமும் மின் கட்டணத்தை நிர்ணயிக்கும் நிலையை உருவாக்கியுள்ளது. மின்சார உற்பத்தியும், மின் விநியோகமும், மின் கட்டண நிர்ணயிப்பும் அரசின் ஆதிக்கத்தில் இருந்து போது கட்டண நிர்ணயிப்பு நிலையான தாகவும், அதனால் நிறுவனத்திற்கு ஏற்படும் நிதி இழப்பை அரசு மானியத்தின் மூலம் ஈடுசெய்வது என்பது கைவிடப்பட்டு, சந்தையே கொள்முதல் விலையை நிர்ணயிப்பது என்ற அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

மின் தேவை அதிகரிக்கும் காலங்களில் தனியார் மின் உற்பத்தியாளர்கள் நிலக்கரி பற்றாக்குறை, தான் விற்ற மின்சாரத்திற்கு உரிய தொகையை மின் விநியோக நிறுவனங்கள் செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளது போன்ற காரணங்களால் மின் உற்பத்தியைக் குறைத்து, செயற்கையாக மின் பற்றாக்குறையை உருவாக்குகின்றனர்.

இதே காலகட்டத்தில் மத்திய மாநில மின் உற்பத்தி நிலையங்கள் கூட மின் உற்பத்தியைக் குறைத்து மின் பற்றாக்குறையை உருவாக்க வழிவகுத்துள்ளனர். அதாவது 2017 ஆம் ஆண்டில் மூன்று மாத சராசரி மின் உற்பத்தி திறன் 53 சதவீத அளவிற்கு குறைந்துள்ளது. இந்த மின் உற்பத்தி குறைப்புக்கு மத்திய அரசு மின் நிலையங்கள் 75 சதவீதமும், மாநில அரசு மின் உற்பத்தி நிலையங்கள் 60 சதவீத அளவிற்கும் மின் உற்பத்தியைக் குறைத்து செயற்கையான மின் பற்றாக்குறைக்கு வழி வகுத்துள்ளனர்.

இவைகளை எல்லாம் பரிசீலித்த மத்திய அரசு வேறு வழியின்றி இயற்கை பேரிடர் காலங்கள், எதிர்பாராத விதமாக மின் உற்பத்தி நிலையங்களில் ஏற்படுகின்ற பழுது போன்ற காரணங்களை தவிர்த்து மத்திய மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கக் கூடிய மின் நிலையங்கள் மின் உற்பத்தியைக் குறைக்கவோ, நிறுத்தவோ கூடாது என்றும் இதன் மூலம் மின்சாரத்தை தனியார் நிறுவனமிடருந்து அதிக விலை கொடுத்து வாங்குவதை தவிர்க்க கூடிய வகையில் சட்டம் இயற்றும் வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் அரசு தனது குறிப்பில் இவ்வாறு சட்டம் இயற்றுவதன் மூலம் இந்திய மின் உற்பத்தியில் அதிக பங்கு வகிக்கும் தனியார் நிறுவனங்கள் மின் பற்றாக்குறை வாய்ப்பை பயன்படுத்தி ஸ்தல விற்பனையாளர்கள் மின் கொள்முதல் விலையை உயர்த்துவதனால் அதை வாங்கும் மின் விநியோக நிறுவனங்கள் நிதி இழப்பை சந்தித்து அளவுக்கு அடங்கா நஷ்டத்தில் செயல்படும் நிலைக்கு தள்ளப்படும் அபாயம் எழுந்துள்ளது.

மின் உற்பத்தியின் தனியார் ஏகபோகம் என்பது மின் வாரியங்களை மட்டும் பாதிக்கும் ஒன்றல்ல, மின் நுகர்வோர்களையும் பாதிக்கும் என்று சி.ஐ.டி.யூ அன்று எச்சரித்தது இன்று அரசே உணரும் நிலை உருவாகியுள்ளது. இனியாகினும் அரசு விழிக்குமா அல்லது இந்நாட்டு, பன்னாட்டு முதலாளிகளுக்கு பக்கபலமகா இருக்குமா என்பதை பொறுத்து இருந்து பார்க்க வேண்டியுள்ளது.

கோடையின் தாக்கம் தமிழகத்தையும் விட்டுவைக்கவில்லை. கோடைகாலத்தில் ஆரம்பத்திலேயே என்றுமில்லாத அளவிற்கு வெப்பக்கதிர் வீச்சும், அதனால் வெப்ப தடுப்பு சாதனங்களும், குளிர்சாதன பயன்பாடும் அதிகரித்துக் கொண்டே செல்வதால் மின்சாரத்தின் தேவையின் பயன்பாடும் என்றுமில்லாத அளவிற்கு அதிகரித்துள்ளதை பார்க்க முடிகிறது.
கோடை வெப்பத்தின் தாக்கத்தை எதிர்கொள்ள மின் பற்றாக்குறையும், மின் வெட்டும் இல்லாமல் செய்வது என்பது தான் அரசின் முழுமுதல் கடமையாக இருந்திடல் வேண்டும்.

ஆனால் தமிழகத்தை ஆளுகின்ற அரசு மின்பற்றாக்குறை, மின்வெட்டை போக்குவதற்கு பதிலாக உண்மைக்கு புறம்பான புள்ளி விவரங்களை அள்ளி வீசிக்கொண்டுள்ளது. அதாவது தமிழகத்தின் உச்சக்கட்ட @தவை 14600 மெகாவாட்டாக இருந்தது என்பது 2018 ஏப்ரல் மாதத்திலேயே உச்சகட்ட பயன்பாடும், தேவையும் 15343 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது. அதில் சென்னை மாநகரத்தின் தேவை மட்டும் 3200 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது என்றும் இத்தேவையை தமிழக அரசு சமாளிக்கும் என்றும், அதற்கான புள்ளி விவரங்களையும் கீழ்கண்டவாறு அளித்து அது ஊடங்களிலும் வெளியாகி உள்ளது.

தமிழக மின் வாரியத்தில் அனல் மின் நிலையம் மூலமாக 11,700 மெகாவாட் என்றும், நீர் மின் உற்பத்தி மூலம் 2300 மெகவாட் என்றும், அணு மின்சாரம் மூலம் 1900 மெகாவாட் என்றும், சூரிய ஒளி மூலம் 1500 மெகாவாட் என்றும், எரிவாயூ மூலம் 500 மெகாவாட் என்றும் காற்றாலை மூலம் 7900 மெகாவாட் என்றும் ஆக மொத்தம் 25800 மெகாவாட் மின் உற்பத்தி திறன் உள்ளது. அதனால் தமிழகத்தின் கோடை மின் தேவையை பற்றாக்குறையின்றி சமாளிக்க முடியும் அதனால் மின் வெட்டு தமிழகத்தில் இருக்காது என்று தமிழக அரசு அதன் அங்கமாக விளங்கும் மின்துறை அமைச்சர் அறிவிப்புக்களை செய்து வருகிறார். ஆனால் உண்மை நிலையோ அதுவல்ல.

மின் உற்பத்தி தொடர்பாக வாரியம் அளித்த புள்ளி விவரத்தில் சொல்லப்பட்ட விவரங்கள் நீர் மின் உற்பத்தி மூலம் 2300 மெகாவாட் என்றும், காற்றாலை மூலம் 7900 மெகாவாட், என்றும் சொல்லி இருப்பது நிரந்தரமான மின் உற்பத்திக்கான ஆதாரமாக எடுத்துக் கொள்ள இயலாது, நீர் மின் உற்பத்தி மூலம் உற்பத்தி திறன் 2300 மெகாவாட் என்றாலும் கூட கடந்த பல மாதங்களாக நீர் மின் உற்பத்தி மூலம் கிடைக்கும் மின்சாரத்தின் அளவு 700 மெகாவாட்டே, என்று வாரிய புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அதன் அடிப்படையில் பார்க்கும் போது அரசு அறிவித்த புள்ளி விவரம் 25800 மெகாவாட்டில் காற்றாலையும், நீர் மின் உற்பத்தி மூலம் தூய்ஷல்லப்பட்ட மின்சாரமான 9500 மெகாவாட் என்பது பருவநிலை காலத்தில் மட்டும் கிடைக்கக்கூடிய மின்சாரமாகும்.

வாரியம் அளித்த 25800 மெகாவாட்டில் பருவகாலங்களில் கிடைக்கும் காற்றாலை, நீர் மின் உற்பத்தி மூலம் 9500ஐ கழித்தால் வாரிய புள்ளி விவரங்களின் அடிப்படையில் 19000 மெகாவாட் மின் உற்பத்தி திறனை மட்டு@ம கணக்கில் கொள்ள முடியும்.

வாரியம் அளித்த 25800 மெகாவாட்டில் உண்மை நிலை, அனல் மின் உற்பத்தி மூலம் (மத்திய மாநில நிறுவனங்கள் மூலம்) தமிழகத்திற்கு கிடைக்க கூடியது 8268 மெகாவாட்டேயாகும். அணுமின் சக்தி மூலம் 1701 மெகவாட், என்பது தான் தமிழகத்திற்கு கிடைக்கும் பங்கு மின்சாரம், நீர் மின் மூலம் 700 மெகாவாட்டும், சூரிய சக்திமூலம் 1500 மெகாவாட்டும், எரிவாயூ மூலம் 500 மெகாவாட்டும் ஆக மொத்தம் 12669 மெகாவாட்டே தமிழகத்திற்கு கிடைக்கும் மின்சார அளவாக உள்ளது.

இவை தவிர நீண்டகால கொள்முதல் ஒப்பந்தத்தின் மூலமாக 3180 மெகாவாட் கொள்முதல் செய்யலாம் என்று ஒழுங்கு முறை ஆணையம் அனுமதித்து அதைவிட கூடுதலாக 1000 மெகாவாட் மின்சாரத்தையும் கொள்முதல் செய்வதன் மூலமாக மொத்த கொள்முதல் 4200 மெகாவாட் அளவிற்கு ரூ.4.95 பைசா விலை கொடுத்து வாங்கியே தற்போது உள்ள தமிழக மின்சார தேவையை சமாளிக்கும் நிலை தான் உண்மை நிலை, அதாவது மத்திய மாநில தனியார் மின் உற்பத்தி மூலம் 12669 மெகாவாட்டும், கூடுதல் நிலை கொடுத்து 4200 மெகாவாட் மின்சாரத்தை பெற்றே இன்றைய மின் தேவையை சமாளிக்கும் நிலை தான் உண்மை நிலை.

தற்போது ஏப்ரல் மாதம் இன்றைய மின் தேவை 15400 என்று அரசு புள்ளி விவரம் கூறுகிறது. மே,ஜுன், ஜுலை மாதங்களில் இந்த மின் தேவை 16500 மெகாவாட்டையும் தாண்டக்கூடிய நிலை ஏற்படும். போது அதிக விலை கொடுத்து வாங்கும் மின்சாரத்தின் அளவும், உயர்ந்து அதனால் பலநுஷறு கோடிகள் ரூபாய் தமிழக மின் வாரியத்திற்கு கூடுதல் செலவும், அதனால் நிதிப் பற்றாக்குறையை சமாளிப்பதற்கு நேரடியான மின் கட்டண உயர்வும், மறைமுகமான மின் கட்டண உயர்வும் தமிக மக்களை தாக்கும் நிலையை மக்கள் எதிர்கொள்வது என்பது தான் உண்மை நிலை.

தமிழகத்தில் உள்ள மத்திய, மாநில மின்நிலையங்கள் மூலம் உற்பத்தியாககம் மின்ய்ஷரத்தையும், அதிக விலை கொடுத்து வாங்கும் மின்ய்ஷரத்தையும் கொண்@ட மின்பற்றாக்குறையை தமிழக அர” ஓரளவு ய்மாளிக்க முடியு@ம தவிர உற்பத்தியால் மட்டும் அல்ல என்பதை தமிழக அர” மறைக்காமல் மக்கள் மத்தியில் கொண்டு தூய்ல்வ@தாடு, நிரந்தர மின்உற்பத்தி ஆதாரங்களை கொண்டு மின்திறனை அதிகப்படுத்துவ@த மின்பற்றாக்குறைக்கு தீர்வு ஆகும்.

Leave a Reply

You must be logged in to post a comment.