கர்நாடகா :

அடுத்த மாதம் 12ம் தேதி கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் காங்கிரஸ் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்கப்போவதில்லை என அம்மாநில முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்று மைசூரில் வேட்புமனு தாக்கல் செய்த முதல்வர் சித்தராமையா அம்மாவட்டத்தில் உள்ள சாமுண்டேஸ்வரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட உள்ளார். இன்று செய்தியாளர்களிடம் காங்கிரஸ் எந்த கட்சியுடனும் கூட்டணி வைக்கப்போவதில்லை எனவும், தனித்துப் போட்டியிட போவதாகவும் கூறினார். மேலும், அவர் கூறுகையில், மத்திய பாஜக அரசு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டது. மக்கள் மோடியின் மீது அதிருப்தியில் உள்ளதாகவும், மக்கள் ஏமாற்றப்பட்டு விட்டதை உணர்ந்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.

மோடி பொருளாதாரம் குறித்து கொடுத்த பல்வேறு வாக்குறுதிகள் மற்றும் கருப்பு பணம் மீட்பு அத்துணையும் பாஜக கட்சியின் மறைமுக கொள்கையினால் புறக்கணிக்கப்பட்டு விட்டன எனவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.