தாராபுரம்,
தாராபுரத்தில் மணல் கடத்திய 2 லாரிகளை வட்டாச்சியர் பறிமுதல் செய்தானர்.

தாராபுரம் பகுதியில் இருந்து உடுமலை, பொள்ளாச்சி பகுதிகளுக்கு மணல்கடத்துவதாக வட்டாச்சியர் சிவக்குமாருக்கு கிடைத்த தகவலின்பேரில் உடுமலை ரவுண்டானா பகுதியில் திடீர்இரவு நேர வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது ஒரு லாரியில் 7 யூனிட் மணலுடன் வேகமாக வந்து கொண்டிருந்தது. லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் மணல் கொண்டு செல்லுவதற்கான பர்மிட்டும் இல்லை. பல்லடம் கிளாங்குண்டலை சேர்ந்த ரவி லாரியை ஓட்டி வந்தது தெரியவந்தது.இதையடுத்து மணல் கடத்தி வந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்ந்து அலங்கியம் ரவுண்டானா பகுதியில் நடைபெற்ற சோதனையில் மற்றொரு 7 யூனிட் மணலுடன் பிடிபட்டது. லாரியை பரமத்தி வேலுரை சேர்ந்த குமரேசன் ஓட்டி வந்தார். லாரி கருர் வாங்கலை சேர்ந்த மனோஜ்ராம் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்துள்ளது. இந்த லாரியிலும் அனுமதி இல்லாமல் மணல் கடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து 2 லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறுத்தப்பட்டது. இதுகுறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகின்றது.

Leave A Reply