கொல்கத்தா :

நேற்று மாலை கொல்கத்தா உள்ளிட்ட  மேற்குவங்காளத்தின் சில பகுதிகளில் இதுவரை கண்டிறாத அளவில் மணிக்கு 84கிமீ மற்றும் 98கிமீ வேகத்தில் இரண்டு கடும் புயலால் தாக்கியது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

மேற்குவங்காளத்தைத் தாக்கிக் கொண்டிருக்கும் இப்புயலால் 15 பேர் மரணமடைந்துள்ளனர் எனவும், 50க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதில் 7 பேர் கொல்கத்தாவையும், 6 பேர் ஹவ்ரா மாவட்டத்தையும், தலா ஒருவர் பான்குரா மற்றும் ஹூக்ளி மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

இறப்புகள் பல இடங்களில் மரங்கள் வேரொடு சாய்ந்ததிலும், கட்டிடங்களின் சுவர்கள் இடிந்து விழுந்ததிலும், மின்சார தாக்குதலிலும் ஏற்பட்டுள்ளன. மேலும் புயலுக்கு வாய்ப்புள்ளதாகவும், பலத்த மழை பெய்யும் எனவும் கொல்கத்தாவின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Leave A Reply

%d bloggers like this: