அகர்தலா:
திரிபுராவில் ஆளும் பாஜக மதவெறியர்களும், ஐபிஎப்டி எனும் பிரிவினைவாத சக்திகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி ஊழியர்களுக்கு எதிராக தொடர்ந்து வன்முறை வெறியாட்டம் நடத்தி வருகின்றனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் தொடங்கியிருக்கும் சூழலில், கட்சியின் ஊழியர்கள் 2 பேரை பாஜக-வினர் படுகொலை செய்துள்ளனர்.தெற்குத் திரிபுரா, சாந்திர் பஜார் உட்கோட்டத்தில் ராகேஷ் தார் என்பவரை கொலை செய்த பாஜக குண்டர்கள், அவரது உடலை மரத்தில் கட்டித் தொங்க விட்டிருக்கிறார்கள். எனினும் காவல்துறையினர் இவ்வழக்கை, தற்கொலை என்று பதிவு செய்திருக்கிறார்கள்.
இதேபோல, தெற்கு அமர்பூர், கோவிந்தபாரி கிராமத்தில், திரிபுரா இளைஞர் சம்மேளனத்தின் உள்ளூர் கமிட்டி செயலாளரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னணி ஊழியருமான தோழர் அஜேந்த்ரா ரியாங் என்பவரும் பாஜக குண்டர்களால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.

தாகூர் செர்ரா என்னுமிடத்தைச் சேர்ந்த பரிமால் தாஸ் என்பவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உள்ளூர் கமிட்டியில் உறுப்பினராக இருக்கிறார். இந்நிலையில், அவரது மனைவியின் சகோதரியும், கர்ப்பிணிப் பெண்ணுமான ஸ்ரபாந்தி தாஸ் என்பவர் மீது பாஜக-வினர் நடத்திய தாக்குதலில், அவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டிருக்கிறது.

Leave A Reply

%d bloggers like this: