அகர்தலா, ஏப்ரல் 18-

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் தொடங்கியுள்ள அதே சமயத்தில் இந்துத்துவா பாசிஸ்ட் மத வெறியர்களும் ஐபிஎப்டி என்னும் திரிபுரா பழங்குடியின அமைப்பைச் சேர்ந்தவர்களும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி ஊழியர்களை அரசியல்ரீதியாகக் கொலை செய்யும் வேலைகளில் இறங்கியுள்ளனர்.

தெற்குத் திரிபுரா, சாந்திர் பஜார் உட்கோட்டத்தில் ராகேஷ் தார் என்பவரை பாஜக குண்டர்கள் கொலை செய்திருக்கிறார்கள். பின்னர் அவரது சடலத்தை மரத்தில் கட்டித் தொங்கவிட்டிருக்கிறார்கள். அவரது கால்கள் தரையைத் தொட்டுக் கொண்டிருக்கின்றன. எனினும் காவல்துறையினர் இவ்வழக்கை , தற்கொலை என்று பதிவு செய்திருக்கிறார்கள்.

இதேபோன்று,  தாகூர் செர்ரா என்னுமிடத்தைச் சேர்ந்த பரிமால் தாஸ் என்பவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தல கமிட்டியில் உறுப்பினராக இருக்கிறார். இவரது மனைவியின் சகோதரியாகிய ஸ்ரபாந்தி தாஸ் என்பவரை அடித்து நொறுக்கியிருக்கின்றனர். அவர் ஒரு கர்ப்பிணி. இவர்களது தாக்குதல் காரணமாக அவருக்குக் கருச்சிதைவு ஏற்பட்டிருக்கிறது.

அடுத்து, தெற்கு அமர்பூர், கோவிந்தபாரி கிராமத்தில்,  திரிபுரா  இளைஞர் சம்மேளனத்தின்  ஸ்தலக் கமிட்டி செயலாளரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னணி ஊழியருமான தோழர் அஜேந்த்ரா ரியாங் என்பவர் பாஜக குண்டர்களால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்.

தங்கள் சொந்த மக்களையே கொல்பவர்களுக்கு எதிராக பாஜக அரசாங்கம் நடவடிக்கை எதுவும் எடுக்குமா?

(ந.நி.)

Leave A Reply

%d bloggers like this: