அகர்தலா:
செயற்கைக்கோள்கள் மற்றும் இணையதள வசதிகள் மகாபாரத காலத்திலேயே இந்தியாவில் இருந்ததாக கூறி, திரிபுரா மாநில பாஜக முதல்வர் பிப்லாப் குமார் தேப், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.திரிபுரா மாநிலத்தில் கம்யூட்டர்மயமாக்கல் மற்றும் சீர்திருத்தம் குறித்து செவ்வாயன்று கருத்தரங்கம் ஒன்று நடைப்பெற்றது. அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்ட இந்த கருத்தரங்கில்தான் பிப்லாப் குமார் தேப், மகாபாரதக் ‘கதை’யை அவிழ்த்து விட்டுள்ளார்.
குருசேத்திர போரில் நடந்தவற்றை எல்லாம், பார்வைத்திறனற்ற திருதராஷ்டிரருக்கு அவரது தேரோட்டி சஞ்சயன், அரண்மனையில் இருந்தவாறே எவ்வாறு தெரிவிக்க முடிந்தது? ஆனால், அவர் தெரிவித்திருக்கிறார் என்றால், இணைய வசதி மூலமே அது சாத்தியமாகி இருக்கிறது; இணையதள வசதியும் செயற்கைக்கோள் தொழில்நுட்பமும் அப்போதே இருந்திருக்கின்றன” என்று பிப்லாப் குமார் தேப் கூறியுள்ளார்.

மேலும், “கம்யூட்டர் தொழில்நுட்பம் தமக்குச் சொந்தமானது என ஐரோப்பாவும் அமெரிக்காவும் உரிமை கோருகின்றன; ஆனால் உண்மையில் அது இந்தியாவுக்குச் சொந்தமானது” என்று கூறியுள்ள பிப்லாப் குமார், “இணையமும் செயற்கைக்கோள் தொழில்நுட்பமும் லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் உண்டு” என்றும் கூசாமல் பேசி, அதிகாரிகளை நெஞ்சடைக்க வைத்துள்ளார்.எனினும், மகாபாரத காலத்திலேயே இருந்த சேட்டிலைட், இண்டர் நெட் வசதிகள், இடைப்பட்ட காலத்தில் எங்கே போய்த் தொலைந்தன? என்பதற்கு, தனியாக கதை எதையும் பிப்லாப் குமார் தேப் கூறவில்லை.

Leave A Reply

%d bloggers like this: