புது தில்லி :

பிரதமர் மோடி பேச வேண்டிய இடங்களில் பேசாமலிருப்பது தங்களுக்கு எதிராக வரும் நடவடிக்கைகளின் போது விலகி இருந்து கொள்ளலாம் என மக்கள் பேச வாய்ப்பளித்திருப்பதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

முந்தைய ஆட்சி காலத்தில் என்னை சமூக பிரச்சனைகளில் பேசுவதில்லை என்று தொடர்ந்து குற்றஞ்சாட்டிய அப்போதைய குஜராத் முதல்வர் மோடி தற்போது பிரதமரான பின்னர் அதை பின்பற்றுவது இல்லை எனவும் மன்மோகன் சிங் கூறினார். அப்போது எனக்கு அளித்த அறிவுரையை முதலில் மோடி கடைபிடிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், கத்துவா சிறுமி கொலை வழக்கை சரியாக கையாளாமல் இருப்பதாக ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் மெக்பூபா முஃப்தியையும் குற்றஞ்சாட்டினார். அதற்கு கூட்டணியில் உள்ள பாஜகதான் காரணமாக முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: