கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையம் அருகே குமரநாயக்கன் பேட்டை கிராமத்தில் அரசு உதவி பெறும் சி.எஸ்.ஐ. தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கு மொத்தம் 27 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

திங்களன்று (ஏப்.16) மதிய உணவாக பிரிஞ்சி சாதம் மற்றும் அவித்த முட்டை வழங்கப்பட்டது. அதை சாப்பிட்ட உடன் 26 மாணவர்கள் திடீரென வாந்தி எடுத்தனர். சிலர் சோர்ந்து மயங்கி கீழே விழுந்தனர். உடனே அவர்களை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.மதிய உணவு சாப்பிட்டதால் உடல் நிலை பாதிக்கப்பட்ட மாணவர்களை மேல் சிகிச்சைக்காக சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நலமருத்துவமனையில் சேர்த்தனர். முன்னதாக மாணவர்கள் சிகிச்சை பெற்று வந்த ஈகுவார்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி நேரில் வந்து ஆய்வு நடத்தினார்.

பள்ளி நிர்வாகிகள், உணவு சமைத்த பெண் உள்பட பலரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அவர் கூறியதாவது:-குழந்தைகள் சாப்பிட்ட உணவு, குடிநீர் மாதிரியை டாக்டர்கள் சேகரித்து பரிசோதனைக்காக அனுப்பி உள்ளனர். தவறு யாராவது செய்திருந்தால் அவர்கள் மீது கண்டிப்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.தலைமை ஆசிரியர் கண்காணிப் பில் குழந்தைகளுக்கு தருகின்ற உணவை மதிய உணவு அமைப்பாளர் சாப்பிட்டு பரிசோதனை செய்த பிறகுதான் குழந்தைகளுக்கு தர வேண்டும் என்பதுதான் நடைமுறை உத்தரவு. இதை கடைபிடிக்க தவறினாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.