கோவை,
தொழில்நுட்பக் கல்வி இயக்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியற் கல்லூரிகளில் 2018-19 கல்வியாண்டிற்கு பட்டப்படிப்பு முடிந்து பணியில் இருப்பவர்கள் பகுதிநேர பி.இ., பிடெக் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தில் கோவை அரசினர் தொழில்நுட்பக் கல்லூரி, பிஎஸ்ஜி பொறியியல் கல்லூரி, சேலம் அரசு பொறியியற் கல்லூரி என 9 கல்லூரிகளில் இந்த படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் பட்டப்படிப்பு முடித்து 2 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும். குறைந்தது 2 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும்.  விண்ணப்பதாரர் தங்கள் பணிபுரியும் இடத்தில் இருந்து 120 கிமீக்குள் உள்ள பொறியியற் கல்லூரிகளில் மட்டுமே விண்ணப்பிக் முடியும். மொத்தம் உள்ள 9 கல்லூரிகளில் 1,465 இடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பகுதிநேர படிப்பிற்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.www.ptbe-tnea.com என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க மே மாதம் 10ம் தேதி இறுதியாகும். ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்த பின்னர் அதை ஜெராக்ஸ் எடுத்து உரிய ஆவணங்கள் மற்றும் பதிவு கட்டணத்துடன் செயலாளர் பகுதிநேர பி.இ, பிடெக் சேர்க்கை, கோவை தொழில்நுட்பக்கல்லூரி, கோவை 641014 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். தொடர்ந்து, ஜூன் 2ம் தேதி கவுன்சிலிங் நடக்கும். வகுப்புகள் மாலை 6 மணிமுதல் இரவு 9 மணிவரை நடத்தப்படும்.

Leave A Reply

%d bloggers like this: