கோவை,
சிறுபான்மையினர் மற்றும் தேவாலயங்கள் மீது தாக்குதல் நடத்தும் இந்துத்துவ சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவையில் செவ்வாயன்று அனைத்து கட்சியின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு கிறிஸ்துவ சிறுபான்மை பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்பேரவையின் ஒருங்கிணைப்பாளர்கள் ஜான்சன், ரமேஷ் உள்ளிட்டோர் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் சிறுபான்மை இன மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை தடுக்க வேண்டும், திட்டமிட்டு தேவலாயங்கள், மசூதிகளை தாக்கும் இந்துத்துவ சமூகவிரோத அமைப்பினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், மதுரையில் புனித நூலான பைபிளை கீழே போட்டு, காலில் மிதித்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், காஷ்மீர் சிறுமியை பலாத்காரம் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் மயூராஜெயக்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர் என்.அமிர்தம், தந்தைபெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன், விடுதலை சிறுத்தை கட்சி இலக்கியன், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் தலைவர் முகமதுமுசீர், செயலாளர் ஜெரோம்ரோட்ரக்ஸ், பொருளாளர் எஸ்.புனிதா மற்றும் பல்வேறு பிரிவைச் சேர்ந்த கிறிஸ்துவ அமைப்பினர், இஸ்லாமிய அமைப்பினர் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் அனைத்து கட்சியின் தலைவர்கள் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.

\முன்னதாக கோவை சிஎஸ்ஐ திருமண்டல செயலாளரும், கிறிஸ்துவ சிறுபான்மை பேரவையன் ஒருங்கிணைப்பாளருமான சார்லஸ் சாம்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது: சமீபகாலமாக சிலர் சிறுபான்மையினர் நலனுக்கு எதிராக செயல்படுகின்றனர். குறிப்பாக தேவாலயங்கள் மீதான தாக்குதலும், போதகர்கள் மீதான தாக்குதலும் நாளுக்கு நாள் அதிகாரித்துள்ளது.சில இடங்களில் மதவழிபாடுகளை நடத்தவிடாமலும் இடையூறு செய்யப்படுகிறது. இதுதொடர்பாக காவல்நிலையங்களில் புகார் தெரிவித்தாலும் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. இது வேதனையை அளிக்கிறது. புதிய தேவாலயங்கள் தொடங்க அனுமதி கேட்டாலும் காலதாமதம் செய்யப்படுகிறது. வேண்டுமென்றே பைபிள் நூலை சிலர் இழிவுப்படுத்தி வருகின்றனர். இதனை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதுபோன்ற செயல் தொடர்ந்து நடந்தால், மிகப்பெரிய அளவிலான போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.