ஈரோடு,
சத்தியமங்கலத்தில் தலித் வகுப்பை சேர்ந்தவர்கள் ஆதிக்க சாதியினர் தேடிவந்தவரை தெரியவில்லை என்று சொல்லிய காரணத்திற்காக தலித்குடும்பத்தினரை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ரங்கசாமி (வயது 48), இவரது மனைவி பெயர் லட்சுமி. இவருக்கு ரம்யா, வினோதினி என இரண்டு மகள்கள் உள்ளனர். இவர் தலித் சமுகத்தை சேர்ந்தவர். இந்நிலையில் இவர் வெள்ளியன்று அருகில் உள்ள தோட்டத்திற்கு வேலைக்கு சென்று விட்டு இரவு 8.30 மணியளவில் வீட்டிற்கு வந்துள்ளார். இரவு 9 மணி வரை வீட்டிற்கு வெளியே நின்றிருந்த போது, இரண்டு சைக்கிள்களில் 6 பேர்கள் வந்துள்ளனர். ரங்கசாமியிடம் எங்கே சுந்தரம் என கேட்டுள்ளார். அப்போது தெரியவில்லை என ரங்கசாமி கூறியுள்ளார். நாங்கள் கேட்டு நீ எப்படி தெரியவில்லை என்று சொல்கிறாய் என்று கூறிய படி சாதிய ஆதிக்க பிரிவை சேர்ந்த சந்தோஷ், மோகன்குமார் ஆகியோர் ராமசாமியை கடுமையாக தாக்கியுள்ளனர். வலியால் கத்திய ராமசாமியை அவரது மனைவி லட்சுமி வந்து காப்பாற்ற முயன்றுள்ளார். இதனையடுத்து சாதிய ஆதிக்க பிரிவை சேர்ந்தவர்கள் தகாத வார்த்தைகளால் திட்டிவிட்டு எங்களிடம் வைத்துக் கொண்டால் கொன்று விடுவோம் என மிரட்டிச் சென்றுள்ளனர்.

இதையடுத்து ,தாக்குதலுக்குள்ளான ரங்காமியை அருகில் இருந்தவர்கள் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் முதலுதவி அளித்து விட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். தாக்கியவர்கள் மீது சத்தியமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Leave a Reply

You must be logged in to post a comment.