ஈரோடு,
காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டத்தில் பணிபுரியும் மாற்றுத்திறனாளியான கிராம உதவியாளர்கள் ஊர்தி பயணப்படி வழங்க வேண்டும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள் சங்கம் சார்பில் செவ்வாயன்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்க மாவட்ட தலைவர் எஸ்.ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் ஆர்.ராஜசேகர், அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கே.வெங்கிடு, மாவட்ட செயலாளர் புஷ்பராகு, மாவட்ட துணைத் தலைவர் ஏசையன், நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் ரங்கசாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள். இதில் திரளானோர் பங்கேற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: