தாராபுரம் :
காஷ்மீர் சிறுமி ஆசிபா பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், குற்றவாளிகளுக்கு உரிய தண்டணை வழங்ககோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பூர் மிஷின் வீதியில் அஞ்சலி செலுத்தப்பட்டது, இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜகோபால், மாவட்டக் குழு உறுப்பினர் சுந்தரம், தெற்கு மாநகரக் குழு உறுப்பினர் பாலன் ஆகியோர்கலந்துகொண்டனர் இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.அதேபோல், பிஎஸ்என்எல் அலுலகத்தில் செவ்வாயன்று மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. தாராபுரம் அண்ணாசிலை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் தாலுகா செயலாளர் என்.கனகராஜ் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் சிறுமி என்றும் பாராமல் காவி பயங்கரவாதிகளால் பாலியல் பலாத்காரம்செய்து படுகொலை செய்ததை கண்டித்தும், இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு உரிய தண்டணை வழங்க கோரியும், குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் பாஜக அமைச்சர்களை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. இடைக்கமிட்டி உறுப்பினர்கள் ஆர்.வெங்கட்ராமன், பி.பொன்னுச்சாமி, நகர கிளை செயலாளர் சுப்பிரமணியம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நீலகிரி:
நீலகிரி மாவட்டத்தில் எருமாடு மற்றும் சேரம்பாடி பகுதிகளில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் மத்திய, மாநில அரசை கண்டித்தும் ஆசீபாவுக்கு நியாயம் கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் பாஸ்கரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.