ஏற்காடு,
ஏற்காடு மலைப்பாதையில் பேருந்தில் இருசக்கர வாகனம் மோதி வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

சேலம் மாவட்டம், கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த யுவராஜ் மகன் அருண்குமார் (20). புகைப்பட கலைஞர், இப்பகுதியை சேர்ந்த தேசிகன் மகன் விஜய் (20). அம்மாப்பேட்டை பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜ் மகன் சூர்யநாரயணன் (22). மூவரும் இருசக்கர வாகனத்தில் ஏற்காட்டை சுற்றி பார்க்க வந்துள்ளனர். ஏற்காட்டை சுற்றிபாரத்துவிட்டு சேலம் திரும்பியுள்ளனர். பைக்கை விஜய் ஓட்டியுள்ளார். மலைப்பாதையின் 20 ஆவது கொண்டை ஊசி வளைவு பகுதியில் சென்றுகொண்டிருந்த போது எதிரில் வந்த தனியார் பேருந்தின் பின் டயர் பகுதியில் மோதியுள்ளனர். இதில் பைக்கில் பின்னால் அமர்ந்து சென்ற அருண்குமாரின் பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அதிகளவில் ரத்தம் வெளியாகியதால் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார்.பேருந்தை ஏற்காடு, ஒலக்கோடு கிராமத்தை சேர்ந்த ராமன் மகன் பொன்ராஜ் (37) என்பவர் ஓட்டியுள்ளார். இது குறித்து ஏற்காடு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Leave A Reply