சேலம்,
மார்க்சிஸ்ட் கட்சியின் சேலம் மாநகர வடக்கு கமிட்டி சார்பில் ரெட்டியூர் மாரியம்மன் கோவில் அருகில் புதிய கட்சி அலுவகமான ஜோதிபாசு நினைவகம் திறப்பு விழா ஞாயிறன்று நடைபெற்றது.

சேலம் மாவட்டத்தில், சிபிஎம் கட்சியின் வடக்கு கமிட்டி சார்பில் புதிய கட்டிட திறப்பு விழா மாநகர வடக்கு செயலாளர் எம்.முருகேசன் தலைமையில் நடைபெற்றது. மாநகர குழு உறுப்பினர் என்.பிரவின்குமார் வரவேற்புரையாற்றினார், புதிய கட்டிடத்தை மாநில செயற்குழு உறுப்பினர் ப.செல்வசிங் திறந்துவைத்தார். மாவட்ட செயலாளர் பி.ராமமூர்த்தி கல்வெட்டை திறந்துவைத்தார். கட்சி கொடியை மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ஜோதிலட்சுமி ஏற்றிவைத்தார்.

முன்னதாக, பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மாவட்ட குழு வடக்கு இடைகமிட்டி உறுப்பினர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். மாநகர குழு உறுப்பினர் வி.வெங்டேஷ் நன்றி கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.