நியூயார்க்:
சிரியா மீது கடந்த ஏப்.13 ஆம் தேதி இரவு அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய 3 நாடுகள் இணைந்து ராக்கெட் மற்றும் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின. டமாஸ்கஸ் அருகே கிளர்ச்சியாளர்கள் வசமிருக்கும் கிழக்கு கூட்டாவில் துமா நகரை கைப்பற்ற சிரியா ராணுவம் அங்கு ரசாயன தாக்குதல் நடத்தியது. அதில் 70 பேர் பலியாகினர்.

அதற்கு முடிவுகட்டும் நோக்கத்தில் அதிபர் ஆசார்-அல்-ஆசாத்துக்கு எதிராக இத்தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும் ரசாயன ஆயுத கிடங்குகள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளிட்ட நிலைகளை குறிவைத்து 100-க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள் வீசப்பட்டன.
சிரியா மீது நடத்தப்பட்ட இத்தாக்குதலுக்கு அமெரிக்காவில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நியூயார்க்கில் யூனியன் சதுக்கத்தில் ஏராளமானோர் திரண்டு குண்டு வீச்சுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.