திருப்பூர்.
கோவில் நில மீட்பு சம்பந்தமாக சட்டமன்றத்தில் சிறப்பு சட்டம் நிறைவேற்றி ஏழை மக்களுக்கு கிரையம் செய்து கொடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசினார்.

திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நில உரிமை பாதுகாப்பு மாநாடு ஞாயிறன்று கே.ஆர்.சி சிட்டி சென்டரில் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு ,மார்க்சிஸ்ட் கட்சியின் தெற்கு ஒன்றியச் செயலாளர் மூர்த்தி தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர் மைதிலி வரவேற்று பேசினார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் , இந்து அறநிலைய துறையின் ஓய்வு பெற்ற துணை ஆணையர் சி.ஜெயராமன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் குணசேகரன், கே.தங்கவேல், மாநில குழு உறுப்பினர் கே.காமராஜ் ,மாவட்ட செயலாளர் செ.முத்துக்கண்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜகோபால் தீர்மானங்களை வாசித்தார்.இதில் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது:

தமிழகம் முழுவதும் சுமார் 1 கோடி மக்கள் கோவில் நிலங்களை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள், தமிழகத்தில் சுமார் 38000 கோவில்கள் இருக்கின்றது, அதில் 34000 கோவில்கள் சிறிய கோவிலகள் ,4000 கோவில்கள் மிக அதிகமான நிலங்
களும் வருமானங்கள் வரும் கோவில்களாக உள்ளன. தமிழகம் முழுவதும் சுமார் 4. 4/3 லட்சம் ஏக்கர் நிலங்கள் இருக்கின்றன. இதில் விவசாயம் செய்யும் மக்கள் இருக்கிறார்கள்.அந்த காலத்தில் எல்லாம் கோவில்கள் நிர்வாக அமைப்பாக இருந்த காரணத்தில் அனைத்து இடங்களும் கோவிலுக்காக எழுதி வைக்கப்பட்டதால் இத்தனை நிலங்கள் உள்ளன. கோயில் நில பிரச்சனைகளுக்காக மார்க்சிஸ்ட் கட்சி பல போராட்டங்களை நடத்திஉள்ளது. 50 ஆண்டுகளாக அரசிடம் அனைத்து வரிகளும் செலுத்தி முறைப்படி அடிப்படை வசதிகளோடு அப்பகுதி மக்கள் வாழ்ந்து வரும் சூழ்நிலையில் திடீரென அரசு கோவில் இடம் எனக்கூறி காலி செய்ய வற்புறுத்தக் கூடாது. அது கோவில் இடமாகஇருந்தால், அறநிலையத்துறை சட்டமன்றத்தில் ஒரு சிறப்பு சட்டத்தை கொண்டு வந்து ஏழை மக்களுக்கு கிரையம் செய்து கொடுக்க வேண்டும். அந்த பணத்தை கோவிலின் பெயரில் வங்கியில் டெபாசிட் செய்ய வேண்டும்.

மேலும், விவசாயிகளுக்கு குறைந்த விலையில் வழங்கிடும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும். தமிழகத்தில் ஆட்சி செய்த கட்சிகள் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மனிதனின் அடிப்படை உரிமைகளை தட்டிப்பறிக்கும் செயலாக 6 வார காலத்திற்குள் காலி செய்யவேண்டும் என்று உத்தரவிடுகிறது. ஆளும் கட்சி நினைத்தால் இந்த பிரச்சனையை தீர்க்க முடியாதா? ஆகவே இந்த பிரச்சனை தமிழகம் முழுவதும் உள்ளது. மே மாதம் கும்பகோணத்தில் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கோயில் நில பிரச்சனைக்கான சிறப்பு மாநாடு நடைபெறுகிறது. அந்த மாநாடில் விவாதிப்பதின் மூலம் அரசுக்கு அறிக்கை அளிக்க உள்ளோம் என்று கூறினார்.இதில் ஓய்வு பெற்ற உதவி ஆணையர் ஜெயராமன் பேசியதாவது;தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் எந்த ஒரு சட்டத்தை கொண்டு வந்தாலும் அது சாதாரண மக்களுக்கான சட்டமாக இருப்பதில்லை, ஆளும் கட்சிகளுக்காகவும் அல்லது மிகப் பெரிய நிர்வாகவங்களுக்கு ஆதரவாக கொண்டு வரும் சட்டமாக தான் உள்ளது.

அறநிலையத்துறைசட்டத்தில் பல சட்டதிருத்தங்கள் வந்துள்ளன. ஆனால் ,அதில் ஒன்று கூட கோவில் நில மீட்பை தளர்வு படுத்துவது சம்பந்தமாக வரவில்லை என்பது வருத்தமளிக்கின்றது. அரசின் கோவில் நிலங்களை தேவைகளுக்கு பயன்படுத்தி வருகிறார்கள். அந்த நிலத்தை ஏக்கருக்கு ரூ1 மட்டுமே குத்தகை கொடுக்கிறார்கள் .ஆனால், அந்த இடத்தை பல நபர்கள் மாற்றி கிரயம் செய்து கொள்கின்றனர். மக்களின் தேவைகளுக்கு பயன்படுத்துவோரிடம் மட்டுமே தங்கள் சட்டத்தை கடுமையாக அமல்படுத்துகிறார்கள் என்று கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.