உடல் நிலை சரியில்லாத சேலம் கோயில் யானையை கருணைக் கொலை செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
சேலம் சுகவனேஸ்வரர் கோயில் பெண் யானை ராஜேஸ்வரி (42 வயது), பக்கவாத நோயினால் கால்கள் பாதிக்கப்பட்டு, எழுந்து நிற்க முடியாமல் சிரமப்பட்டு வருகிறது. எனவே, யானையை கருணைக்  கொலை செய்வதற்கு அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் மனு தாக்கல் செய்தார்.  இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ‘யானையின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் பரிசோதனை செய்து, 48 மணி நேரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். பரிசோதனை பலன் தராதநிலையில், யானையைக் கருணைக் கொலை செய்யலாம்’ என்று உத்தரவிட்டார்.

Leave A Reply

%d bloggers like this: