குயின்ஸ்லாந்து:
21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து நகரில் உள்ள கோல்டுகோஸ்ட் பகுதியில் ஏப்ரல் 4-ஆம் தேதி முதல் ஏப்ரல் 15-ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த விளையாட்டுத் திருவிழாவில், மொத்தம் 43 நாடுகள் பதக்கப்பட்டியலில் இடம் பிடித்தன.போட்டியை நடத்திய ஆஸ்திரேலியா 80 தங்கம், 59 வெள்ளி, 59 வெண்கலம் என மொத்தம் 198 பதக்கங்களை குவித்து முதலிடம் பிடித்தது.ஆஸ்திரேலியா நீச்சலில் மட்டும் 28 தங்கம், 21 வெள்ளி, 24 வெண்கலம் என 73 பதக்கங்களை குவித்துள்ளது.

இங்கிலாந்து 45 தங்கம்,45 வெள்ளி, 46 வெண்கலம் என மொத்தம் 136 பதக்கங்களை வென்று 2-வது பிடித்தது.26 தங்கம், 20 வெள்ளி, 20 வெண்கலம் என்று மொத்தம் 66 பதக்கங்களை வென்று இந்தியா மூன்றாவது இடத்தை பிடித்தது.

நிறைவு விழா அணி வகுப்பில் தங்கம் வென்ற குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் இந்திய அணிக்கு தேசிய கொடி ஏந்தி சென்றார்.

2 பதக்கங்கள் தான்
2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் 15 தங்கம், 30 வெள்ளி, 19 வெண்கலத்துடன் 64 பதக்கங்கள் இந்தியா 5-வது இடத்தை பெற்றிருந்தது.இந்த முறை இரண்டு பதக்கங்கள் மட்டுமே கூடுதலாக (66 பதக்கங்கள்) பெற்றுள்ளது.

2010-ஆம் ஆண்டு தில்லியில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் 38 தங்கம், 27 வெள்ளி, 36 வெண்கலத்துடன் 101 பதக்கங்கள் குவித்து 2-வது இடம் பிடித்ததே காமன்வெல்த் தொடரில் இந்தியாவின் சிறந்த செயல்பாடு என்பது குறிப்பிடத்தக்கது.அடுத்த காமன்வெல்த் போட்டி 2022-ம் ஆண்டு இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெறுகிறது.நிறைவு விழாவில் காமன்வெல்த் கொடி பர்மிங்காம் மேயரிடம் வழங்கப்பட்டது.

காமன்வெல்த் பதக்கப்பட்டியல்
நாடுகள்                                    த                     வெ                வெண்              மொ
ஆஸ்திரேலியா                     80                       59                      59                  198
இங்கிலாந்து                           45                       45                      46                  136
இந்தியா                                  26                        20                      20                    66
கனடா                                     15                        40                       27                   82
நியூசிலாந்து                          15                       16                        15                    46

Leave a Reply

You must be logged in to post a comment.