நங்கவள்ளி,:
ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பதிவு செய்த அனைத்து பெண்களுக்கும் வேலை கேட்டு சேலம் மாவட்டம் நங்கவள்ளியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் திங்களன்று நடைபெற்றது.

மத்திய, மாநில அரசுகளின் தவறான நெறிமுறைகளால் நாட்டில் விலை வாசி உயர்வு ஏற்பட்டுள்ளது. மேலும் , பணமதிப்பு இழப்பு உள்ளிட்ட பிரச்சனைகளால் பொதுமக்களின் வழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடுமையான வறட்சி மற்றும் வேலை இன்மையால் கிராமபுற மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்பு திட்டத்தில் கிடைக்கும் சிறு ஊதியத்தில் வாழ்ந்து வந்த நிலையில் தற்போது இந்த திட்டம் முழுமையாக செயல்படுத்த வில்லை. இதனை கண்டித்தும் கிராம புற வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பதிவு செய்த அனைத்து பெண்களுக்கும் முறையாக வேலை வழங்க கோரி நங்கவள்ளி ஒன்றிய அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றிய செயலாளர் ஜி.கவிதா தலைமையில் நடைபெற்றது.

போராட்டத்தை மாவட்ட உதவி தலைவர் எஸ்.எம்.தேவி துவக்கிவைத்தார். மாவட்ட தலைவர் டி.பரமேஸ்வரி, மாவட்ட செயலாளர் ஐ.ஞானசௌந்தரி சிறப்புரையாற்றினர். சிபிஎம் மாவட்ட செயலாளர் பி.ராமமூர்த்தி வாழ்த்தி பேசினார். மாவட்ட உதவி தலைவர் கே.ராஜாத்தி போராட்டத்தில் நிறைவுரையாற்றினார். இதில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கிருஷ்ணவேணி, மேனகா, விஜய்கலா, சத்தியா, மகேஷ்வரி, ராஜாத்தி, விஜயா, செல்வி உள்ளிட்டு திரளனோர் பங்கேற்றனர். ஒன்றிய பொருளாளர் கார்த்திகா நன்றியுரையாற்றினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.