நாமக்கல்,
இலவச வீட்டு மனைப்பட்டா கேட்டு பொதுமக்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியத்திடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: குமாரபாளையம் தாலூக்கவிற்கு உட்பட்ட பள்ளிபாளையம், காவிரி ஆர்.எஸ், புதுப்பாளையம், அன்னை சத்யா நகர், ஆயக்காட்டூர், ஓடப்பள்ளி ஆகிய பகுதிகளில் 75 க்கும் மேற்பட்ட கூலித்தொழிலாளிகள் வசித்து வருகிறோம். நாங்கள் இப்பகுதிகளில் கடந்த 40 ஆண்டுகளாக வாடகை வீட்டில் தங்கி கூலி தொழில் செய்து வருகிறோம். எங்களுக்கு சொந்தமாக வீட்டுமனை இல்லை எனவே தாங்கள் உரிய நடவடிக்கை எடுத்து இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும், இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: