மொலுகாஸ்:
இந்தோனேசியாவில் திங்களன்று அதிகாலை மொலுகாஸ் பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 5.9 அலகுகளாக திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது என அமெரிக்க புவியியல் மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பல்வேறு தீவுகளை கொண்ட இந்தோனேசியா, அதிக அளவில் நிலநடுக்கம் ஏற்படும் நெருப்பு வளைய பகுதியில் அமைந்துள்ளது. இந்நிலையில், திங்கள்கிழமை அதிகாலை மொலுகாஸ் பகுதியில் திடீரென பூகம்பம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 5.9 அலகுகளாகப் பதிவான இந்த நிலநடுக்கம், கடலுக்கு அடியில் 36.5 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. இந்த திடீர் நிலநடுக்கத்தால் அப்பகுதியில் இருந்த வீடுகள் மற்றும் கட்டங்களும் குலுங்கியதால் மக்கள் அலறியடித்து வெளியே ஓடி வந்து சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

நிலநடுக்கத்தால் சிறியளவில் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் இணையதளத்தில் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அதிகாரப் பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

Leave A Reply