இங்கிலாந்து துணைக்கண்டத்தில் உள்ள கால்பந்து கிளப் அணிகளுக்காக நடைபெற்ற இங்கிலீஷ் ப்ரீமியர் லீக் தொடரில் மான்செஸ்டர் சிட்டி அணி 86 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.இந்த தொடரின் இறுதி சுற்று ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட்- வெஸ்ட் புரும்விக் அணிகள் மோதின.பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோலடிக்க முடியாமல் திணறின.58-வது நிமிடத்தில் வெஸ்ட் புரும்விக் அணியின் நட்சத்திர வீரர் ரோட்ரிகஸ் கோலடித்து அசத்தினார்.இறுதியில் வெஸ்ட் புரும்விக் அணி 1-0 என்ற கணக்கில் மான்செஸ்ட்ர் யுனைடெட் அணியை எளிதாக சாய்த்தது.

ஆட்டம் முடிந்தவுடன் தயாரிக்கப்பட்ட புள்ளிபட்டியலில் மான்செஸ்டர் சிட்டி அணி 86 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து சாம்பியன் பட்டம் வென்றது.மான்செஸ்ட்ர் யுனைடெட் அணி 71 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும்,70 புள்ளிகளுடன் லிவர்பூல் அணி மூன்றாம் இடத்தையும் பிடித்தது.

Leave a Reply

You must be logged in to post a comment.