ஈரோடு,
சட்டமேதை அம்பேத்கர் அவர்களின் 127 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு ஈரோட்டில் கோவை பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம், காப்பீட்டு கழக ஊழியர் சங்கம், இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் மற்றும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்கம் போன்ற சங்கங்களின் சார்பில் சனியன்று சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது.இதில், பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எல்.பரமேஸ்வரன் தலைமை வகித்தார். வங்கி ஊழியர் சம்மேளனத்தின் மாவட்ட தலைவர் ஆர்.பூவேந்திரன் வரவேற்றார். எல்.ஐ.சி. கிளை செயலாளர் எ.வாசுதேவன் அம்பேத்கர் உருவ படத்திற்கு மாலை அணிவித்தார். நேஷனல் இன்சூரன்ஸ் நிர்வாக அதிகாரி பி.ராஜசேகரன் வாழ்த்துரை வழங்கினார்.

இதில் , சிறப்புரையாற்றியா தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் தி.தங்கவேலு வர்க்க போராட்டமும், பண்பாடும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினர். இறுதியாக, கோய்மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்க இணைச்செயலாளர் ஆர்.பாபு நன்றி கூறினார். இதில் திரளானோர்கள் பங்கேற்றனர்.

நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம். வெப்படையில் வி.பி. சிந்தன் நினைவகத்தில் சாதி ஒழிப்பு போராட்டம், அம்பேத்கர் அதற்கு உயிரோட்டம் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கிற்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் கணேச பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட துணை தலைவர் எஸ்.ஆறுமுகம் வரவேற்றுப்பேசினார். மாவட்ட குழு உறுப்பினர் ஏ.எம்.பொன்னுசாமி முன்னிலை வகித்தார். தொடர்ந்து நடைபெற்ற இந்த கருத்தரங்கில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணைச் பொதுசெயலாளர் யு.கே.சிவஞானம் கருத்துரை ஆற்றினார். மேலும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பி.பெருமாள் மற்றும் விதொசா மாநிலக் குழுசம்பூர்ணம்,வாலிபர் சங்க மாவட்டசெயலாளர் இ.கோவிந்தராஜ், பஞ்சாலை சங்க மாவட்ட செயலாளர் எஸ்.தனபால் உள்ளிட்டோர் வாழ்த்துரை ஆற்றினார்.இதில் சுமார் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.