நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் வெண்மணி ஊராட்சியைச் சேர்ந்த 5 குடும்பத்தினர், மாற்றுக் கட்சிகளிலிருந்து விலகி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர்.வெண்மணி தியாகிகள் நினைவாலயத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு சி.பி.எம்.கீழ்வேளூர் ஒன்றியச் செயலாளர் ஜி.ஜெயராமன் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான நாகைமாலி, கட்சியில் இணைந்த 5 குடும்பத்தினரையும் (15பேர்) வரவேற்றுச் சால்வை அணிவித்துப் பாராட்டிப் பேசினார்.

இதில், சி.பி.எம் மாவட்டக் குழு உறுப்பினர் எம்.செல்வராஜ், வாலிபர் சங்க ஒன்றியச் செயலாளர் ஏ.சிவக்குமார், ஒன்றியத் தலைவர் ஆர்.இளையராஜா, கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, அண்ணாதுரை, ஆர்.முத்தையன், டி.துரைராஜ், பி.சக்திதாசன், கே.செல்லமுத்து மற்றும் டி.சிங்காரவேலு, வி.செல்வராஜ், பி.மோகன், தம்புசாமி, ஆர்.மணியம்மாள், நாகராஜன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.