ஈரோடு,
ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட மரவபாளையம் பகுதியில் சுகாதார சீர்கேடுகளை கண்டித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் மாநகராட்சி ஆணையாளரிடம் மனு அளித்துள்ளனர்.

ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட மரவபாளையம் பகுதியில் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இங்கு, ஏற்பட்டுள்ள சுகாதார சீர்கேடுகளாக, வீடு வீடாக குப்பைகள் அள்ளப்படாமல் உள்ளது. குப்பைகள் வாங்கும் வாகனம் பழுதடைந்து உள்ளது, புதியதாக குப்பை வாங்கும் வாகனம் வழங்க வேண்டும். சாக்கடைகளில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் செல்லும் நேரத்தில் கூடுதல் பேருந்து வசதி செய்து கொடுக்க வேண்டும். மேலும், பல ஆண்டுகளாக சுத்தம் செய்யாமல் இருக்கும் குடிநீர் மேல்நிலை தொட்டியை சுத்தம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநகர ஒருங்கிணைப்பாளர் அன்பழகன் தலைமையில் மாநகராட்சி ஆணையாளர் சீனி அஜ்மல்கானிடன் மனு அளித்தனர். இதில் திரளானோர்கள் பங்கேற்றனர்.

Leave A Reply