சிறுமி ஆசிபா படுகொலை செய்யப்பட்ட சம்பவம், நிர்பயா சம்பவத்திற்கு பிறகு, நிகழ்ந்த மிகப்பெரிய கொடுமையாக பார்க்கப்படும் நிலையில், குற்றவாளிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று ஜம்மு- காஷ்மீர் மாநில பாஜக-வினர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். சிறுமி ஆசிபா சம்பவம் பொய்யாக ஜோடிக்கப்பட்டவை என்று அம்மாநில பாஜக-வினர் கூறியுள்ளனர். மேலும், சஞ்ஜிராம் உள்ளிட்ட 8 பேரையும் விடுதலை செய்யக் கோரி, பாஜக-வினர் நடத்திய பேரணியில், ஜம்மு- காஷ்மீர் மாநில பாஜக அமைச்சர்கள் 2 பேரும் பங்கேற்றனர்.

காஷ்மீரில், மக்கள் ஜனநாயக கட்சி – பாஜக கூட்டணி ஆட்சி நடந்துவரும் நிலையில், முதல்வர் மெகபூபா முப்தி அரசானது, பாஜக-வினரை சமாதானப்படுத்தும் வேலையில் இறங்கியுள்ளது. இதனை முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவருமான உமர் அப்துல்லா கண்டித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.