புதுதில்லி:
அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு 3 காசுகள் சரிந்துள்ளது. வங்கிகள் மற்றும் இறக்குமதியாளர்களிடையே டாலரின் தேவை உயர்ந்துள்ளதே, ரூபாய் மதிப்பு சரிவுக்கு முக்கியக் காரணமாகும் என்று கூறப்படுகிறது.

இன்று காலை நிலவரப்படி, ரூபாயின் மதிப்பு ஒரு டாலருக்கு 65 ரூபாய் 29 காசுகளாகவும், கடந்த வர்த்தக முடிவில் ரூபாய் மதிப்பு ஒரு டாலருக்கு 65 ரூபாய் 26 காசுகளாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: