தீக்கதிர்

ஹிமாச்சல்: பேருந்து விபத்தில் 27 பள்ளிக்குழந்தைகள் உள்பட 30 பேர் மரணம்

சிம்லா :

ஹிமாச்சல் பிரதேச மாநிலம் கங்ரா மாவட்டத்தின் நுர்பூர் பகுதியில் வாசிர் ராம் சிங் நினைவு பொதுப்பள்ளி என்ற பள்ளியின் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் 27 பள்ளி குழந்தைகள், 2 ஆசிரியர்கள் மற்றும் மற்றும் பேருந்தின் ஓட்டுனர் மதன் லால்(67) என 30 பேர் பலியாகினர்.

பேருந்து நிலை தடுமாறி 100 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் கவுந்ததை அறிந்து அதிகாரிகள் அங்கு செல்வதற்கு முன்பே அப்பகுதி கிராம மக்கள் மீட்பு பணியில் இறங்கினர். மேலும், இதில் காயமடந்த 12 பேரின் நிலைமை மோசமாக உள்ளதாக கூறப்படுகிறது. இச்சம்பவத்திற்கு நாடு முழுவதும் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.