காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க தவறிய மோடி அரசை கண்டித்தும், மேலாண்மை வாரியம் அமைக்காமல் கார்ப்பரேட்கள்  கோடிகளை குவிக்க தமிழகத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்துவதறகு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் இன்று மாலை முதல் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்,  தமிழக வாழ்வுரிமை கட்சியினர், நாம் தமிழர் கட்சியினர், எஸ்டிபிஐ கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் போராட்டக்களத்தில் குதித்திருக்கின்றனர். கிரிக்கெட் நடைபெறும் சேப்பாக்கம் மைதானம் செல்லும் அனைத்து பகதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. ஆயிக்கணக்கானோர் இந்த போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர். போராடுபவர்களை காவல்துறையினர் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். கலை இலக்கிய பண்பாட்டு பேரவை என்ற பெயரில் ஏராளமானோர் திரணடு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சேப்பாக்கம் மைதானத்தை சுற்றி 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் ஐபிஎல் நிர்வாகம் மத்திய உள்துறை அமைச்சகத்தை தொடர்பு கொண்டு பாதுகாக்பை உறுதி படுத்த கோரி வந்தனர். இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் தமிழக காவல்துறையினரை நேரடியாக வழிநடத்துவதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் நடைபெறுவது அதிமுக ஆட்சியா அல்லது பாஜக ஆட்சியா என்ற கேள்விளையும் எழுப்பி வருகின்றனர். காவல்துறையின் தடுப்புகளை மீறி ஆயிரக்கணக்காண போராட்டக்காரர்கள் மைதானத்தை நோக்கி முன்னேறி வருகின்றனர். காவல்துறையினர் தடியடிக்கு தயாரகி வருகின்றனர்.

இந்த போராட்டத்தில் திரைப்பட இயக்குநர்கள், பாரதி ராஜா,ஸ்ரீ ராம், கவிஞர் வைரமுத்து, தங்கர்பச்சான் உள்ளிட்டடோரும் பங்கேற்றிருக்கின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.