பாட்னா :

ஏப்ரல் 10ம் தேதியான இன்று எஸ்சி/எஸ்டி இட ஒதுக்கீட்டுக்கு எதிரான கொள்கைகளை நீதிமன்றம் வாயிலாகவே அமுல் படுத்த முற்படும் மத்திய அரசாங்கத்தை எதிர்த்து நாடு தழுவிய போராட்டங்களை பல்வேறு அமைப்புகள் அறிவித்திருந்தன.

இவ்வமைப்புகளால் வட மாநிலங்களில் பரவலாக சாலை மறியல்கள், இரயில் மறியல்கள் மற்றும் கடையடைப்புகள் என நடத்தப்பட்டன. பிகாரில் பல்வேறு இடங்களில் மிக தீவிரமாக நடைபெற்ற போராட்டத்தில் போராட்டக்காரர்களுக்கும், இப்போராட்டத்தை எதிர்க்கும் சில அமைப்பினர்களுக்கும் இடையே சில இடங்களில் மோதல்கள் மூண்டன. இதில் சுமார் 12க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். மேலும், அங்கு பல இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

எஸ்சி/எஸ்டி வன்முறை தடுப்புச் சட்டத்தை வலுவிழக்க செய்யும் வகையிலான உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து பல்வேறு வகையான போராட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளன. மேலும், இது நூற்றுக்கணக்கானவர்களை படுகாயம் படுத்தியும், சில உயிர் பலிகளையும் ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: