லக்னோ,

உத்தரபிரதேச மாநிலத்தில் அம்பேத்கருக்கு காவி வண்ணம் பூசியதால் ஏற்பட்ட சர்ச்சைகளை தொடர்ந்து மீண்டும் நீலநிறம் பூசப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் பாடூன் மாவட்டம் துக்ராய்யா கிராமத்தில் இருந்த அம்பேத்கர் சிலை கடந்த சனியன்று சேதப்படுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து அந்த சிலை அதிகாரிகள் மூடி வைத்தனர். பின்னர் அந்த சிலைக்கு பதிலாக வேறு சிலை வைக்கப்பட்டது. அவ்வாறு வைக்கப்பட்ட சிலைக்கு காவி வண்ணம் பூசப்பட்டுள்ளது.
யோகி ஆதித்யநாத் பதவி ஏற்றது முதல் அரசு அலுவலகங்கள் காவல் நிலையங்களை தொடர்ந்து தற்போது திட்டமிட்டு அம்பேத்கர் சிலைக்கு காவி வண்ணம் பூசப்பட்டுள்ளது என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
இது குறித்த செய்திகள் வெளியான நிலையில், அங்குள்ள பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்கள் சிலைக்கு மீண்டும் நீல நிற பெயிண்ட் அடித்தனர்

Leave a Reply

You must be logged in to post a comment.