தீக்கதிர்

பின்னோக்கி ஓடிய ரயில்: 7 பேர் சஸ்பெண்ட்…!

புவனேஸ்வர்:
அகமதாபாத்தில் இருந்து பூரி நோக்கிச் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று ஒடிசாவின் திட்லாகர் ரயில் நிலையத்தில் வேறு பெட்டிகளை இணைப்பதற்காக எஞ்சின் கழற்றப்பட்டபோது பெட்டிகள் மட்டும் தனியாக ஓடின.

இந்தச் சம்பவத்தில் பயணிகள் யாருக்கும் காயமில்லை என்றாலும், சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் ரயில் தானாக ஓடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஊழியர்கள் 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.