புதுதில்லி:
அகில இந்திய பணி விதிமுறைகளின்படி, அனைத்து ஐ.பி.எஸ். அதிகாரிகளும் தங்களது அசையா சொத்து விவரங்களை ஆண்டுதோறும் ஜனவரி 31-ஆம் தேதிக்குள் உரிய படிவத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

ஆனால், 2016-ம் ஆண்டுக்கான சொத்து விவரங்களை 515 ஐ.பி.எஸ். அதிகாரிகள் இன்னும் சமர்ப்பிக்கவில்லை. இதுதொடர்பாக சம்பந்தப்பட்டவர்களிடம் விளக்கம் கேட்குமாறு மாநில அரசுகளை உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.